பக்கம் எண் :

சீறாப்புராணம்

422


முதற்பாகம்
 

     வல்லமையா சீம்குலத்துக் கனைவோருங்

        குறைசிகளு மகிழ்ச்சி யாயென்

     னில்லிடத்தில் வரமுதனாட் கிடையாத

        பெருந்தவஞ்செய் திருந்தே னென்றான்.

59

      (இ-ள்) அன்றியும், சொல்லுதற்கரிய காரணங்க ளெல்லாவற்றிற்கும் பொருந்திய சம்பத்தாயும் நமது பந்துக்களின் ஜீவனாயும் இவ்வுலகத்தின்கண் உதயமாய் விளங்கா நிற்கும் மேகங்கள் உலாவுகின்ற குடைநிழலின் வள்ளலாகிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு விவாகமுடிக்கும் சமாச்சாரமாய் வலிமையையுடைய ஹாஷீம்குலத்தின் எல்லாவரும் குறைஷிகளானவர்களும் மனக்களிப்பாக எனது வீட்டின்கண் வரும்படி ஆதிகாலத்தில் கிடைத்தற் கரிய பெரிய தவத்தைச் செய்திருந்தேனென்று சொல்லினான்.

 

1093. அவ்வுரைகேட் டபுத்தாலி பகக்களிப்புத்

         தலைமீறி யரசே கேளீர்

     மௌவல்கமழ் குழன்மயிலை யென்மகற்கு

         மணக்கமுடிக்க வரப்பெற் றேனாற்

     பௌவநதி சூழ்பாரைப் புரந்தளிக்கும்

         பெரும்பதவி படைத்தேன் செல்வ

     மெவ்வெவையும் படைத்தேனிங் கினிக்கிடையாப்

         பொருளுமெனக் கெய்து மென்றார்.

60

     (இ-ள்) குவைலிது சொல்லிய வார்த்தைகளை அபீத்தாலிபவர்கள் இருகாது களினாலுங் கேள்வியுற்று மனமகிழ்ச்சி யானது சிரசின்கண் அதிகரித்து அக்குவைலிதைப் பார்த்து இராஜரானவரே! நீவிர் கேட்பீராக; யான் வாசனை பரிமளியா நிற்கும் கூந்தலையுடைய மயிலாகிய உமது புதல்வி கதீஜாநாயகியை எனது மகன் முகம்மதென்பவர்க்கு விவாகம் முடிக்க உம்மிடத்தில் வந்தேன். அதனால் சமுத்திரம் சூழ்ந்த இந்தப் பூலோகத்தைக் காத்து இரட்சிக்கும் பெரிய பதவியைச் சம்பாதித்தேன். அன்றியும் எல்லாவகைப்பட்ட செல்வங்களையும் சம்பாதித்தேன். இனிமேல் இவ்விடத்தில் எனக்கு அகப்படாத பொருள்களும் அகப்படுமென்று சொன்னார்கள்.

 

1096. இருவருஞ்சம் மதித்துரைத்தா ரெனக்குறைசிக்

          குலத்தரச ரிதயங் கூர்ந்து

     மருமருபூங் குழலாட்கு முகம்மதுக்கு

          மணநாளை வகுத்துக் கூறித்