|
முதற்பாகம்
1094.
தெரிதருசீ தனப்பொருளு
மின்னதென
வகைவகையாய்த்
தெளியச் சாற்றிப்
பொருவரிய
பொற்பிளவும் வெள்ளிலையுந்
தருகவெனப்
புகழ்ந்திட் டாரால்.
61
(இ-ள்) அப்போது குறைஷிக்குலத்தின்
அரசர்களான அங்குற்றிருந்த யாவர்களும் மனமுடன்பட்டு ஒருவர்க்கொருவர் பேசினார்களென்றுத் தங்கள்
தங்களது மனமானது கூரப்பெற்று வாசனை பொருந்தும் அழகிய கூந்தலையுடைய கதீஜா நாயகியவர்களுக்கும்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கும் முகூர்த்த நாளை இன்னதென்று வகைப்படுத்திச்
சொல்லி விளக்கமான சீதனப் பொருளும் இன்னதென்று வகைவகையாகத் தெளிவாய்ச் சொல்லி ஒப்பில்லாத
அழகிய அடைக்காயின் பிளவும் வெற்றிலையும் தருவாயாகவென்று அக்குவைலிதைத் துதித்துக் கேட்டார்கள்.
1095.
வெள்ளிலைபா கேலமில
வங்கமுடன்
றக்கோலம்
விரைகற் பூர
மள்ளியசந் தனச்சேறும்
பொற்கலத்தில்
குவைலிதெடுத்
தருள வாங்கி
வள்ளியோர்க்
கினிதீய்ந்து மறையோர்க்கு
மெடுத்தருளி
வலக்கை சேர்த்தித்
தெள்ளியநன் முகூர்த்தமுதற்
றிங்களென
வகுத்துரைத்தார்
செவ்வி யோரே.
62
(இ-ள்) அவ்விதங் கேட்கவே குவைலிதென்பவன்
வெற்றிலை, பாக்கு, ஏலம், இலவங்கத்துடன் தக்கோலம் பரிமளத்தையுடைய கற்பூரம், அள்ளப்பட்ட
சந்தனக் குழம்பாகிய இவைகளனைத்தையும் எடுத்துப் பொன்னினாலான ஒரு தட்டத்தில் வைத்துக்
கொடுக்க, அதை அழகையுடையவர்களான அபீத்தாலிபவர்கள் தங்களிரு கைகளினாலும் வாங்கி வரையாது
கொடா நிற்கும் அங்குற்ற வள்ளியோர்க்கு இனிமையுடனருளி வேதியர்களுக்கும் எடுத்துக் கொடுத்துத்
தங்களின் வலது கையை குவைலிதின் வலது கையோடு பொருந்தும்படி செய்து தெளிவாகிய நன்மை பொருந்திய
முகூர்த்தமானது வருகின்ற முதல் திங்கள் கிழமைக்கென்று வகைப்படுத்திச் சொன்னார்கள்.
1096.
இலங்கிலைவேற்
குவைலிதுபா லிருந்துபசா
ரத்தினுட னெழுந்து
நீங்கா
வலங்கலணி
புயத்துணைவ ரனைவரொடு
மபூத்தாலி
பன்பு கூர
|