பக்கம் எண் :

சீறாப்புராணம்

429


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், புன்னை மரங்களின் அதிக வெண்ணிறமமைந்த முகைப் பருவத்தையுடைய குளிர்ச்சி தங்கிய புஷ்பங்களை மாலையாகக் கட்டி நானாபக்கங்களிலும் நாலும்படிவிட்டு அதின் நடுவுகளிலும் தேனீக்கள் தங்கியிருக்கின்ற சாயலானது, பெருமை பொருந்திய சமுத்திரத்தினாற் பெறப் பெற்ற முத்துக்களைப் பிரகாசிக்கும் வண்ணம் தொடுத்து அதின் நடுவுகளின் நீலநிறத்தையுடைய மகத்தான இரத்தினங்களைத் தொடுத்தவைகளை ஒத்திருந்தது.

 

1110. குவளை மைவிழிச் சுரிகுழ லியர்கொழுங் கரத்தாற்

     றுவளு மாதளை மலரினை நிரைநிரை தொடுத்துத்

     தவள மாமணிப் பந்தரிற் றூக்கிய தன்மை

     பவள மாலிகை நான்றன போன்றன பாங்கர்.

14

     (இ-ள்) அன்றியும், நீலோற்பலப் புஷ்பத்தைப் போன்ற மையுண்ட கண்களைப் பெற்ற முறுக்குத் தங்கிய கூந்தலையுடைய பெண்கள் தங்களினது செழிய கைகளினால் துவளா நிற்கும் மாதுளையினது புஷ்பங்களை வரிசை வரிசையாய்க் கட்டி வெண்ணிறத்தைக் கொண்ட மகத்தான இரத்தினங்களையுடைய பந்தர்களில் தூக்கிய விதமானது நான்கு பக்கங்களிலும் பவளத்தினாலான மாலைகள் நான்றவைகளை யொத்திருந்தது.

 

1111. சலதி வெண்டிரைத் தரளவெண் மணியொடு தயங்கக்

     குலவு நீலமா மணியிடை கோத்தவை தூக்கி

     யிலகு பூந்துகிற் பந்தரின் வயினிடு கதிர்க

     ணிலவு வெண்கதி ரொடுமிருள் பரந்தென நிகர்த்த.

15

      (இ-ள்) அன்றியும், வெள்ளிய அலைகளையுடைய சமுத்திரத்தின்கண் உதயமாகா நிற்கும் முத்தாகிய வெண்ணிறத்தையுடைய இரத்தினங்களுடன் பிரகாசிக்கும் வண்ணம் ஒளிர்கின்ற மகத்தாகிய நீலவிரத்தி னங்களை நடுவுகளிற் கோத்து அவைகளை நானா பக்கங்களிலும் தூக்கி விளங்கா நின்ற பூம்பட்டுகளையுடைய பந்தர்களினிடத்து வீசுகின்ற கிரணங்களானவை, இலங்குகின்ற வெள்ளிய கிரணங்களுடன் இருள்களானவை யெங்கும் பரவி இருந்தவைகளை யொத்திருந்தன. 

 

1112. மாச டர்த்தெறி மரகத மணிநிரை வடங்க

     ளூச லாயணி நான்றிட வுமிழ்பசுங் கதிர்கள்

     பூச சந்தனச் சுவர்தொறும் வாயிலின் புறத்தும்

     பாச டைத்திரள் விரிந்தன பாரினும் பரப்பும்.

16