|
முதற்பாகம்
(இ-ள்) அன்றியும்,
மாசுகளை அடரும் வண்ணம் செய்து எறியா நிற்கும் மரகத மணிகளின் வரிசையையுடைய வடங்கள் ஊஞ்சலாய்
அழகுடன் நால அதனால் உமிழாநின்ற பசியகிரணங்கள் சந்தனத்தைப் பூசிய சுவர்க ளெல்லாவற்றிலும்
வாயிலின் பக்கங்களிலும் பூமியின் கண்ணும் பச்சை நிறத்தையுடைய இலைகளின் கூட்டமானது பரவியதைப்
போல் பரவும்படி செய்யும்.
1113.
மிக்க செம்மணித்
தொடையலில் விளங்கிய கதிர்கள்
பக்க மீக்கொளப்
பந்தரின் வயிரபந் திகளி
னொக்க வெங்கணும்
பரந்தது நிறைந்திட வுயர்ந்த
செக்கர் வானக
மீனொடு திகழ்வன சிவணும்.
(இ-ள்) அன்றியும், மிகுந்த செந்நிறத்தைக்
கொண்ட இரத்தின மாலைகளில் பிரகாசித்த கிரணங்கள் பக்கங்களில் உயர்ச்சி யமைந்த அந்தப்
பந்தர்களினது வயிரமணிகளின் வரிசையில் ஒருமிக்க எவ்விடங்களிலும் பரவினது, மேலாகிய செவ்வானமானது
நிறையும் வண்ணம் நட்சத்திரங்களுடன் ஒளிர்வதை நிகர்த்திருந்தது.
1114.
அறைப்பு
றத்தினு மாலயத் திடத்தினு மணியாற்
சிறப்பு மிக்கன
செய்தவத் தெருத்தலை தோறு
முறப்ப சந்தசெங்
குமிழ்க்கிளி யினத்தொடு மொழுங்காய்ப்
பறப்ப தொத்தன
பாசிலைத் தோரண பந்தி.
18
(இ-ள்) அன்றியும், அறைப்புறங்களிலும் தேவாலயமாகிய
கஃபத்துல்லாவி னிடங்களிலும் மிகுந்த இரத்தின வர்க்கங்களினால் அலங்காரங்கள் செய்த அவ்வீதிக
ளெல்லாவற்றிலும் பசிய இலைகளை யுடைய தோரணங்களினது வரிசைகளானவை, முழுவதும் பச்சை நிறத்தைக்
கொண்ட சிவந்த செசிண்டினையுடைய கிளிகள் தங்களின் இனத்தோடும் வரிசையாகப் பறப்பதை யொத்திருந்தன.
1115.
கனக மாமழை
பொழிதர வருமபுல் காசீ
மனதி னன்னெறி
யொழுங்குறு மாட்சியின் மான
வினம ணிக்கதிர்
தவழ்நிலை மேனிலை யெவையும்
புனைமு கிற்குல
மொத்தென வகில்புகைத் திடுவார்.
19
(இ-ள்) அன்றியும், பெருமை பொருந்திய
சொர்ணத்தினாலான மழையைப் பொழியும் வண்ணம் வந்த இந்நூலின் உதாரநாயகர் அபுல்காசீம் மரைக்காய
ரவர்களின் நல்ல சன்மார்க்கத்தினது வரிசை பொருந்தும் உள்ளத்தின் மாட்சியைப் போலக் கூட்டமாகிய
இரத்தினங்களினது பிரகாசம் தவழா நிற்கும்
|