|
முதற்பாகம்
1162.
கதியுறு பரியின்
மேலோர் காளையை நோக்கி நோக்கிப்
புதியதோர் செவ்வி
வாய்ந்த பொலன்கொடி யொருத்தி யிந்தப்
பதியினிற் பிறந்து
செய்த பலத்தினுக் குற்ற பேறாய்
மதியினைக் கொடுத்துக்
கொள்ளா மாலையே வாங்கிக் கொண்டாள்.
66
(இ-ள்) அன்றியும்,
நூதனமாகிய ஒப்பற்ற அழகானது சிறக்கப்பெற்ற பொன்னாலியன்ற கொடிபோலும் ஒரு பெண்ணானவள் மல்லகதி,
மயூரகதி, வியாக்ரகதி, வானரகதி, விடபகதி யென்னும் ஐங்கதிகளைக் கொண்ட குதிரையின் மீது தங்கிய
இளம்பருவத்தையுடையவர்களான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்துப்
பார்த்து இந்தப் புவியின்கண் அவதரித்து இயற்றிய பயனுக்குப் பொருந்திய பேறாகத் தனது புத்தியைக்
கொடுத்து தான் ஒரு நாளுங் கொண்டிராத அவர்களின் மீதுள்ள ஆசையாகிய மயக்கத்தையே பெற்றுக்
கொண்டாள்.
1163.
இனமணிச் செழுங்கொம் பன்னா ருடனெழுந் தெதிரிற் புக்கிச்
சினமதக் கரியுந்
தேருஞ் சிவிகையும் பரியுஞ் சூழப்
புனன்முகிற் கவிகை
வள்ளல் வருவதும் பொருந்த நோக்கிக்
கனவெனத் தெளிவு
றாமற் கலங்கிநின் றொருத்தி போனாள்.
67
(இ-ள்) அன்றியும்,
ஒரு பெண்ணானவள் கூட்டமாகிய இரத்தினவர்க்கங்களையுடைய செழிய கொம்பைப் போன்றவர்களான மற்றும்
பெண்களோடு எழும்பி எதிரிற் போய்ச் சேர்ந்துக் கோபமமைந்த மதங்களையுடைய யானைகளும் இரதங்களும்
பல்லக்குகளும் குதிரைகளும் வளையும் வண்ணம் ஜலத்தைப் பெற்ற மேகக் குடையையுடைய வள்ளலான நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருவதையும் பொருந்தும்படி பார்த்து சொப்பனமென்று
சொல்லி மனத்தெளிவுறாமல் கலக்கமடைந்து நின்று போயினாள்.
1164.
கனமுகி லனைய கூந்தற்
காரிகை யொருத்தி யுள்ள
நினைவெலாங்
குரிசி றோன்று நெறியிடை யெதிரிற் போக்கி
யினமெங்கே யாய
மெங்கே யெவ்விடத் தேகின் றேனென்
மனமெங்கே
யான்றா னெங்கே யெனநின்று மறுகு கின்றாள்.
68
(இ-ள்) அன்றியும்,
கூட்டமாகிய மேகங்களை நிகர்த்த கூந்தலையுடைய காரிகையாகிய ஒரு பெண்ணானவள் தனது மனவெண்ண முழுவதையும்
குரிசிலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தோன்றாநிற்கும்
|