முதற்பாகம்
கஃபத்துல்லா வரலாற்றுப்
படலம்
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
1217.
தருமமனு நெறியறிவு
பொறையொழுக்க
மினையனவுந்
தழைத்து வாழக்
கருமுகிலின் செழுங்கவிகை
யினிதோங்கக்
குரிசிலகங்
களிக்கு நாளில்
வரிவிழிச்செங்
கனித்துவர்வாய்க் கொடியிடையார்
புடைசூழ
வளருஞ் செல்வம்
பெருகுமிள மயில்கதீசா
சயினபெனும்
பசுங்கிளியைப்
பெற்றா ரன்றே.
1
(இ-ள்) எப்பொருள்கட்கு
மிறைவரான நமது நாயகம் ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் புண்ணியம், மனுநீதி, அறிவு, பொறுமை, ஒழுக்கமாகிய இவைகளும் இவை போன்ற பலவும் தழைப்புற்று
வாழவும், கரிய நிறத்தையுடைய செழியமேகத்தினது குடையானது இனிமையுட னோங்கவும், சந்தோஷமடைந்திருக்குங்
காலத்தில், இரேகைகள் படர்ந்த கண்களையும் சிவந்த கொவ்வைக்கனியையும், பவளத்தையும்
போன்ற வாயினையும் கொடி போன்ற இடையினையு முடையவர்களான பெண்கள் பக்கத்திற் சூழும் வண்ணம்
ஓங்காநின்ற செல்வமானது அதிகரிக்கும் இளமயிலாகிய கதீஜாநாயகியவர்கள் ஸயினபென்று சொல்லும்
அபிதானத்தையுடைய பசிய கிளியாகிய ஒரு பெண் குழந்தையைப் பெற்றார்கள்.
1218.
சயினபெனு மணியீன்ற
வலம்புரிநே
ரனையகுலத்
தரும மாது
குயின்மொழிறு கையாவை
யீன்றும்முக்
குல்தூமை
யீன்று பின்னர்
செயிரறநா லாவதிலாண்
பிள்ளைகா
சீமெனவோர்
செம்ம லீன்று
நயமுறப்பின் தையுபெனுஞ்
சேயீன்று
தாகிறையு
நல்கி னாரே.
2
|