முதற்பாகம்
விள்ளருங் கணக்கா
றாறிரண் டதின்மேல்
மேலவன்
றிருவுளப் படியால்
வெள்ளிடை யதனிற்
சிறிதொளி திரண்டு
விழித்திடும்
விழிக்கெதிர் தோன்றும்.
2
(இ-ள்)
புள்ளிகளை யுடைய தேனீக்கள் மதுவை யருந்தி இராகம் பாடும் சோலைகள் பிரகாசிக்கின்ற திருமக்கமா
நகரத்தின்கண் தெளிவான குறைஷிக் கூட்டத்தி லுதயமாகிய செம்மலான கீர்த்தி தங்கிய நாயகம்
நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குச் சொல்லுதற்கரிய வயசின் கணக்கானது
முப்பத்தெட்டின்மேல் மேலவனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் திவ்விய சித்தத்தின் வண்ணம்
வெளியில் சிறிது பிரகாசமானது திரட்சியுற்று பார்த்திடும் பார்வைகளுக்கு எதிராய்த் தோற்றா
நிற்கும்.
1243.
தெரிந்திடு
மொளியைத் தம்மிரு விழியாற்
றெரிதர நோக்குவர்
காணா
திருந்திடும்
பின்னுந் தோற்றிடு மிதனை
யெவரொடும்
விடுத்தெடுத் துரையார்
பொருந்துளக்
களிப்பு மச்சமும் பிறப்பப்
புந்தியிற்
றேர்குவர் பொருவாக்
கருந்தலைக் கவைநா
வரவுட றடிந்த
கவின்கர
தலமுகம் மதுவே.
3
(இ-ள்) அவ்வாறு
தோற்றமாகும் பிரகாசத்தை யாதொன்றும் ஒப்பாகாத கரிய சிரத்தையும் பிளவைக் கொண்ட நாவையுமுடைய
சர்ப்பத்தினது சரீரத்தை வெட்டிய அழகிய கைத்தலத்தைப் பெற்ற நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் தங்களின் இரு கண்களினாலும் தெரியும் வண்ணம் பார்ப்பார்கள். அப்போது
அப்பிரகாசமானது அவர்களின் கண்களுக்குத் தெரியாதிருக்கும் பின்னரும் முன்போலவே தோற்றமாகும்
இவ்வற்புதத்தை யாரோடும் பிரித்தெடுத்துச் சொல்லார்கள். மனசின்கண் பொருந்தா நின்ற சந்தோஷமும்
பயங்கரமும் உண்டாகும்படி அறிவினாலேயே தெளிவடைவார்கள்.
1244.
திசையனைத் தினுமந்
தரத்தினு மிகுந்த
திசையினு
மிரவினும் பகலு
மிசையுறச் சிறிது
தொனிகளே பிறக்கு
மெதிர்ந்துநோக்
கிடிலுருத் தெரியா
திசையினும்
பிரியா தடுத்துறைந் தவர்தஞ்
செவியினு
மத்தொனி சாரா
வசையறுங் குறைசிக்
குலத்துறுங் குரிசின்
மனத்தினி
லதிசயம் பெறுவார்.
4
|