பக்கம் எண் :

சீறாப்புராணம்

479


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், எண்டிசைகளிலும் ஆகாயத்திலும் அங்கிருக்கப் பெற்ற திசைகளிலும் இராக் காலங்களிலும் பகற் காலங்களிலும் சிறிது சத்தங்கள் பொருந்தும் வண்ணம் உண்டாகும். எதிர்த்துப் பார்த்தால் யாதொரு சொருபத்தையுங்காணாது அசைந்து சென்றாலும் அத்தொனிகள் நீங்காது நெருங்கித் தங்கி யிருக்கப்பட்டவர்களின் காதுகளிலும் கேளாது. அதனால் குற்றமற்ற குறைஷிக் கூட்டத்திற் பொருந்திய குரிசிலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களினது மனத்தின்கண் ஆச்சரிய மடைவார்கள்.

 

1245. இவ்வண்ணஞ் சிறிது பகனிகழ்ந் ததற்பி

         னெழில்பெறும் வரிசிலைக் குரிசின்

     மைவண்ண விழியா ரிடத்தினி லுறையா

          மற்றொரு வரையுடன் கூட்டாச்

     செவ்வண்ணக் கருத்திற் றனியிருப் பதற்கே

          சிந்திக்கு மதன்படி தேறி

     யெவ்வரை யிடத்துங் காலினி லேகி

          யெழில்பெறத் தனித்தனி யிருப்பார்.

5

      (இ-ள்) இந்தப்படியாகக் கொஞ்சநாள் நடந்ததின் பின்னர் அழகு பெற்ற நெடிய வில்லையுடைய குரிசிலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மையைக் கொண்ட அழகிய கண்களையுடையவர்களான கதீஜாநாயகியவர்களிடத்தில் தங்காமலும் வேறேயொருவரைத் தங்களோடு சேராமலும் செவ்விய குணத்தை யுடைய தங்களின் கருத்தில் ஏகமாய் இருப்பதற்கு எண்ணும். அந்த எண்ணத்தின்படி தெளிந்து எந்த மலைக ளிடத்திலும் தங்களின் பாதங்களினால் ஒப்பற நடந்து சென்று அழகுபெறும் வண்ணம் தனியாகவே தங்கி யிருப்பார்கள்.

 

1246. உலகினிற் பிறந்து வருமெழு வகைக்கு

          முயிரெனுஞ் சலதரக் கவிகை

     நிலைபெறு நிழலார் முகம்மது தனித்து

          நிறைகதிர் தவழ்கிறா மலையி

     னலனுற வுலவி மனனுறும் படியே

          நாலுநா ளிரண்டுநா ளிருந்து

     சிலையென வளைந்த சிறுநுதற் கதீசா

          திருமனை யிடத்தினில் வருவார்.

6

      (இ-ள்) அவ்வாறு உலகத்தின்கண் உதயமாய் வராநிற்கும் தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரமாகிய இவ்வெழுவகைத் தோற்றத்திற்கும் ஜீவனென்று சொல்லும் மேகக்குடை நிலை பெற்ற நிழலையுடைய நாயகம் நபிமுகம்மது