பக்கம் எண் :

சீறாப்புராணம்

511


முதற்பாகம்
 

வாசனையுற்ற தாமரை மலர்போலும் பாதங்களைத் துதித்து அவர்களை நெருங்கினார்கள்.

 

1336. வந்த குறைசிக் குலத்திலுறு

         மடங்க லனைய முதியோர்தஞ்

     சிந்தை குளிர வானவர்கோன்

          றிருத்தி யுரைத்த வணக்கமுறை

     யந்த மிலிதன் றூதரெடுத்

          தறைய நெறிநேர் வழுவாமற்

     பந்தி பெறநின் றுறுந்தொழுகை

          படித்தார் பாவந் துடைத்தாரே.

41

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த குறைஷிக் குலத்திற் பொருந்திய சிங்கத்தை நிகர்த்த முதியவர்களாகிய அவர்களினது மனமானது குளிரும்படி முடிவற்றவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதராகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களுக்கு அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் செவ்வைப் படுத்திக் கூறிய தொழுகையினது ஒழுங்கை எடுத்துச் சொல்ல, அவர்களியாவர்களும் சன்மார்க்க முறைமை யானது தப்பாது வரிசை பெறும் வண்ணம் நின்று பொருந்திய தொழுகையைக் கற்றுத் தங்களின் பாவங்களை இல்லாமற் செய்தார்கள்.

 

1337. வடுவைப் பகிர்ந்த கரியவிழி

          மயிலும் வரிசை நயினாரு

     மடல்வெம் புரவிக் குரிசிலபூ

          பக்க ரலிசஃ துதுமானுந்

     தடவெண் கவிகைச் சுபைறொடுதல்

          காவும் அப்து றகுமானும்

     புடைவிட் டகலாச் செழுந்தேனைப்

          பொருந்துஞ் சிறைவண் டெனத்தொழுதார்.

42

      (இ-ள்) அவ்விதம் கற்று மாம்பிஞ்சைத் தமக்கிணை யில்லையென்று பிளக்கும்படி செய்த கரிய கண்களையுடைய மயிலாகிய கதீஜாறலியல்லாகு அன்ஹா அவர்களும், சங்கையையுடைய ஆண்டவர்களான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும், வலிமை கொண்ட வெவ்விய குதிரையையுடைய குரிசிலாகிய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும், அலி றலியல்லாகு அன்கு அவர்களும், சகுது றலியல்லாகு அன்கு அவர்களும், உதுமான் றலியல்லாகு அன்கு அவர்களும், விசாலமாகிய வெள்ளைக் குடையையுடைய சுபைறுறலியல்லாகு அன்கு அவர்களோடு தல்ஹா றலியல்லாகு அன்கு