பக்கம் எண் :

சீறாப்புராணம்

52


முதற்பாகம்
 

(இ-ள்) அன்றியும், வேதங்களில் மிக்கோர்கள் ஓதுகின்ற ஓசையும், சிறப்பாகிய துறவினது பெருமையிற் சிறந்தோர்களினது திக்கிறின் ஓசையும், சூழ்தலுற்று எப்பொருட்கு மிறைவனாகிய அல்லாகு சுபுகா னகுவத்த ஆலாவை வணங்கி இரண்டு கைகளையும் மார்புக்கு நேராக ஏந்தி வரிசை வரிசையாக ஆமீனென்று சொல்லிய ஓசையும் எவ்விடத்தும் முழங்காநிற்கும்.