பக்கம் எண் :

சீறாப்புராணம்

559


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு பார்த்த யாசிறென்பவரின் நாயகியானவர் நன்மை பொருந்திய அறிவுகளுக்கு இருப்பிடமானவர். குற்றமறும் வண்ணம் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரை வளர்க்கா நிற்கும் வேலியானவர். அன்பான தொழியப் பெற்று அந்த நாயகர் மகன் மகளாகிய மூவர்களின் துன்பங்களையும் பாரேனென்று சொல்லிக் களங்கமற்ற சுவர்க்கலோகத்தைப் பார்க்கும் வண்ணம் போய்ச் சேர்ந்தார்கள்.

 

1471. தெரிமறை முகம்மதின் றீனுக் காகவே

     யிருநிலத் திடைமுத லிறந்து தேன்சொரி

     மருமலர் சுவர்க்கமா ராயம் பெற்றவர்

     தருஅம்மா றுடையதா யெவர்க்குந் தாயரே.

132

      (இ-ள்) வேதங்களில் தெரியப் பெற்ற புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்காகப் பெரிய இப்பூலோகத்தின் கண் முதலாவது மரித்து மதுவைச் சிந்தா நிற்கும் பரிமளமமைந்த புஷ்பங்களையுடைய சொர்க்கலோகத்தினது சோபனத்தைப் பெற்றவர் கற்பகத்தருவை நிகர்த்த அம்மாறுடைய தாயாரானவர் யாவர்களுக்கும் தாயாரானவர்.

 

1472. அன்னமென் னடைச்சுமை யாவென் றோதிய

     மின்மை ருலகிடை மேய பின்னெடு

     வன்னியின் குழிக்குடல் வளர்க்கும் பாதக

     ருன்னிய கொடுஞ்சின மொழிந்தி லாரரோ.

133

      (இ-ள்) அவ்வாறு அன்னப் பட்சியினது நடையை யொத்த மெல்லிய நடையை யுடைய சுமையாவென்று சொல்லும் பெண்ணானவர் தேவர்களின் உலகமான சொர்க்கலோகத்தின்கண் போய்ச் சேர்ந்த பின்னரும் அக்கினியைக் கொண்ட நெடிய கிடங்குகளை யுடைய நரகலோகத்திற்காய்த் தங்களின் சரீரங்களை வளர்க்கா நிற்கும் துரோகத்தை யுடையவர்களாகிய அந்தக் காபிர்கள் தாங்கள் நினைத்த கொடிய கோபமானது நீங்கிலர்கள்.

 

1473. துன்னல ரிழைத்திடுந் துன்பத் தாலடன்

     மன்னவன் யாசிறு மகளும் வாடிநின்

     றின்னலி லிடைந்திடைந் திறந்து சோதிவாய்ப்

     பொன்னுல கினிற்குடி புகுதப் போயினார்.

134

      (இ-ள்) அவ்விதம், நீக்காத சத்துராதிகளாகிய அந்தக் காபிர்கள் செய்திடும் வருத்தத்தினால் வலிமையையுடைய மன்னவராகிய யாசிறும் அவரின் புதல்வியும் வாட்டமுற்று நின்று துன்பத்தினால்