பக்கம் எண் :

சீறாப்புராணம்

614


முதற்பாகம்
 

பாவங்களை இன்றையதினம் போக்கடித்தேன். ஆதலால் உனது வீடாகிய பெரிய வளையின்கண் போவாயாக வென்று சொல்லி ஆசீர்வதித்தார்.

 

1636. உறைதருங் குழுவின ருவப்ப நோக்கித்தன்

     னறபிதன் முகமல ரதனை நோக்கிமெய்

     மறைநபி பங்கய வதன நோக்கிப்பின்

     னிறைதரு மகிழ்ச்சிபெற் றுடும்பு நின்றதே.

39

      (இ-ள்) அப்போது அந்த உடும்பானது அங்கு தங்கிய கூட்டத்தார்களான அசுஹாபிமார்கள் மகிழும் வண்ணம் அவர்களைப் பார்த்து தனது அறபியினது முகமாகிய தாமரைப் புஷ்பத்தைப் பார்த்து சத்திய வேதத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முண்டக மலர்போன்ற முகத்தைப் பார்த்துப் பின்னர் பூரணப்பட்ட சந்தோஷத்தைப் பெற்று நின்றது.

 

1637. மருப்புய நபிதிரு மதுர வாய்திறந்

     திருப்பிடத் தேகென வுடும்புக் கின்புற

     வுரைப்பது கேட்டுளங் கனிந்து கானிடை

     விருப்பொடும் போயது விலங்கின் சாதியே.

40

      (இ-ள்) அவ்விதம் நிற்கவே, வாசனையைக் கொண்ட தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் தெய்வீகமுற்ற இனிமையையுடைய வாயைத் திறந்து அந்த உடும்பை நீ உனது இருப்பிடத்திற்குச் செல்லென்று மகிழ்ச்சி பொருந்தும் வண்ணம் சொன்னதை விலங்கின் இனமாகிய அந்த வுடும்பானது தனது காதுகளினாற் கேள்வியுற்று மனமானது கனியப் பெற்று விருப்பத்தோடும் காட்டின்கண் சென்றது.