பக்கம் எண் :

சீறாப்புராணம்

613


முதற்பாகம்
 

      (இ-ள்) அந்த வுடும்பானது இந்த சமாச்சாரங்களைச் சொன்ன மாத்திரத்தில் அவ்வறபியாகிய வேடனென்று சொல்லப்பட்டவன் மனசின்கண் விருப்பமடைந்து தனது துன்பங்களை யொழித்து நின்று எளிமையையுடையவனான யானும் எனது குடும்பமும் குபிர் மார்க்கத்தினால் பிரதி தினமும் படா நிற்கும் பாவத்தை யொழியுங்களென்று சொல்லி நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பாதங்களைப் பிடித்தான்.

 

1633. வண்ணவொண் புயநபி பாதம் வைத்தகை

     கண்ணினிற் பதித்தகங் கனிய முத்தமிட்

     டெண்ணில வுவகையுற் றெவரும் போற்றிட

     வுண்ணெகிழ்ந் தருங்கலி மாவை யோதினான்.

36

      (இ-ள்) அழகிய பிரகாசத்தைக் கொண்ட தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பாதங்களில் அவ்வாறு வைத்த கைகளைக் கண்களில் பதியும்படி செய்து மனமானது கனியும் வண்ணம் முத்தமிட்டுக் கணக்கில்லாத மகிழ்ச்சி யடைந்து யாவர்களும் துதிக்கும்படி இருதயம் நெகிழப் பெற்று அருமையான கலிமாவைத் தமது வாயினால் ஓதினார்.

 

1634. புதியவ னபிகலி மாவின் பொற்புற

     வொதுவுடன் வருமுறை யொழுகி மாமறை

     விதிமுறைத் தொழுகையு மேவி மேதையின்

     முதியவ னிவனென முசுலி மாயினான்.

37

      (இ-ள்) அவ்விதம் ஓதிய அவர் புதிய ஆலத்தையுடையவனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் நபியாகிய றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கலிமாவினது அழகானதுறும் வண்ணம் உலுவோடும் வரா நிற்கும் முறைமைகளில் நடந்து மகத்தான விதியினது ஒழுங்குகளையுடைய தொழுகையையும் விரும்பி இவர் அறிவினது முதியவரென்று சொல்லும் வண்ணம் முசிலிமாயினார்.

 

1635. உனைப்பிடித் தடர்ந்தன னுனது செய்கையா

     லெனைப்பிடித் தடர்பவ மின்று போக்கினேன்

     மனைத்தட வளைசெலென் றுடும்பை வாழ்த்தினான்

     பனைத்தடக் கரக்களி றனைய பண்பினான்.

38

      (இ-ள்) அன்றியும், பனைமரத்தை யொத்த பெரிய துதிக்கையைக் கொண்ட யானையைப் போன்ற தகுதியை யுடையவரான அவர் அந்த உடும்பை யான் உன்னை நெருங்கிப் பிடித்தேன். உனது செய்கையினால் என்னைப் பிடித்து நெருங்கிய