பக்கம் எண் :

சீறாப்புராணம்

612


முதற்பாகம்
 

சொல்லும்படி கேட்ட மாத்திரத்தில் சிறுத்த முட்போன்ற பற்களையுடைய வெள்ளிய நிறமும் சிவந்த நுனியும் தங்கிய பஞ்சின் நூலையொத்த தனது இரட்டை நாவுகளைத் தூக்கிச் சொல்லும்.

 

1629. பரவைவிண் ணிலமலை பருதி மற்றவு

     முரியநும் மொளிவினி லுள்ள வுண்மையிற்

     றெரிதர முதலவன் செவ்வித் தூதரா

     யிருநில நபிகளி னிலங்கு மேன்மையா.

32

      (இ-ள்) சமுத்திரமும் ஆகாயமும் பூலோகமும் மலைகளும் சூரியனும் மற்றவைகளும் உரித்தான தங்களின் ஒளியிலுள்ளன. அன்றியும், சத்தியமாய் விளங்கும் வண்ணம் யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் அழகிய றசூலாய்ப் பெரிய இந்தப் பூமிலோகத்தினது நபிமார்களில் பிரகாசியா நிற்கும் மேன்மையாக.

 

1630. ஈறினில் வருநபி யிவணும் வாக்கினிற்

     கூறிய மார்க்கமே மார்க்கங் கோதறத்

     தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீதென

     வேறுரைத் தவரவர் நரகின் வீழ்வரால்.

33

      (இ-ள்) கடைசியில் வந்த நபியானவர்கள் இப்பூமியின்கண் தங்களுடைய வாக்கினாற் சொல்லிய மார்க்கமே மார்க்கம். அதைக் குற்றமறும் வண்ணம் தெரிந்தவர்கள் சுவர்க்கலோகத்தைச் சேருவார்கள். குற்றமென்று வேறுபாடாய்க் கூறினவர்களான அவர்கள் நரகலோகத்தின்கண் விழுவார்கள்.

 

1631. இனிதினும் பெயர்க்கலி மாவை யென்னொடும்

     வனமுறை யஃறிணை வாழ்த்து கின்றது

     நனிபுக ழுண்மைநன் னபியு நீரலாற்

     பினையிவ ணிலையென வுடும்பு பேசிற்றே.

34

      (இ-ள்) இன்பமாய்த் தங்களின் திருநாமத்தையுடைய கலிமாவை யென்னுடன் காட்டின்கண் தங்கிய அஃறிணைச் சாதிகள் துதிக்கின்றன. மிகுத்த கீர்த்தியையுடைய மெய்யான நன்மை பொருந்திய நபியும் நீங்களே யல்லாமல் இவ்வுலகத்தின்கண் வேறே நபிமார்களில்ல ரென்று அந்த உடும்பானது சொல்லிற்று.

 

1632. உடும்பிவை யுரைத்தலு முவந்து தன்மனத்

     திடும்பினைத் தவிர்த்துநின் றறபி யென்பவன்

     குடும்பமு மெளியனுங் குபிரி னாற்றினம்

     படும்பவந் தவிர்கெனப் பாதம் பற்றினான்.

35