|
முதற்பாகம்
திறந்து என்னைக்
கூப்பிட்ட சமாச்சாரங்களைச் சொல்லுங்களென்று கேட்க.
1625.
தேறிய
மொழியிவை செவியிற் சார்தலு
மாறிலா
தியாரைநீ வணங்கு கின்றனை
வேறற வுரையென
விளங்கு நந்நபி
கூறலு முசலிகை
மறுத்துங் கூறுமால்.
28
(இ-ள்)
தெளிவையுற்ற இந்த வார்த்தைகள் காதுகளிற் பொருந்தின மாத்திரத்தில் விளங்கா நிற்கும் நமது
நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நீ மாறாது யாரை வணங்குகின்றாய்? அதை
வேற்றுமையான தற்றிடும் வண்ணம் சொல்லென்று கேட்டவளவில் அவ்வுடும்பானது மறுத்துஞ் சொல்லும்.
1626.
மருமலி
வள்ளலியான் வணங்கு நாயக
னொருவனன்
னோனெழி லுயர்சிங் காசனம்
பொருவரும்
வானில்ரா சாங்கம் பூமியிற்
றெரிதருங்
கிருபையோ செம்பொ னாட்டினில்.
29
(இ-ள்)
கஸ்தூரி வாசனை யதிகரித்த காத்திரத்தையுடைய வள்ளலானவர்களே! நான் வணங்குகின்ற நாயகனானவன்
ஏகன். அவனுடைய அழகிய மேலான சிங்காசனமானது ஒப்பற்ற வானலோகத்தில், இராஜாங்கம் பூமியில்,
தோற்றா நிற்கும் கருணை சிவந்த பொன்னாலான சொர்க்க லோகத்தில்.
1627.
தீதிக லற்றவன்
சினந்து செய்யுமவ்
வேதனை நரகமென்
றெரியும் வீட்டினிற்
பேதமி
லன்னதோர் பெரிய வன்றனை
யோதியான்
வணங்குவ துண்மை யென்றதே.
30
(இ-ள்)
தீமையும் பகைமையு மற்று அவன் கோபித்துச் செய்கின்ற அந்த வேதனையானது நரகலோகமென்று
சொல்லிப் பற்றா நிற்கும் வீட்டில் மாறுபாடற்ற அவ்வித ஒப்பில்லாத பெரியவனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவைத் துதித்து நான் வணங்குவது சத்தியமென்று சொல்லிற்று.
1628.
அறத்தொடு முரைத்தனை யென்னை யாரெனக்
குறித்தனை
யெனநபி கூறக் கேட்டலுஞ்
சிறுத்தமுள்
ளெயிற்றவெண் ணிறத்த செம்முனை
யிறுத்தநூ
லிரட்டைநா வெடுத்தி யம்புமால்.
31
(இ-ள்)
அப்போது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வுடும்பை நீ தருமத்தோடும்
சொன்னாய். ஆனால் என்னை யாரென்று மதித்தாயென்று
|