|
முதற்பாகம்
போலுண்டாகிய
தன்மையையுடைய நகங்களைப் பூமியின் கண் பதியும் வண்ணம் ஊன்றி எள்ளிடும் அளவுள்ள தலமாயினும்
நீங்கிச் செல்லாது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை யாவற்றிற்கும்
இறைவனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின் றசூலென்று வலிமை தரும்படி மனசின்கண் தேறிப் பார்த்தது.
1622.
ஆரமு தனையசொல் லரிய வாய்திறந்
தோர்மொழி
நந்நபி யுடும்பைக் கூவலுஞ்
சீர்பெற
விருவிழி திறந்து நோக்கிநின்
றீர்தரு நாவெடுத்
தியம்பிற் றன்றரோ.
25
(இ-ள்)
அவ்விதம் பார்க்கவே நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நிறைந்த
தேவாமிர்தத்தைப் போலும் வார்த்தைகளையுடைய அருமையான தங்களின் வாயைத் திறந்து ஒப்பற்ற
வார்த்தையாக அந்த உடும்பைக் கூப்பிட்ட மாத்திரத்தில் அவ்வுடும்பானது கீர்த்தி பெறும்
வண்ணம் தனது இரண்டு கண்களையும் திறந்து நின்று அந்நபிகள் பெருமானவர்களைப் பார்த்துப்
பிளவையுடைய நாவைத் தூக்கி பதில் பேசிற்று.
1623.
இகம்பர மெனவரு மிருமைக் குண்மையா
யுகம்பல
வுதிக்குமுன் னுதித்துப் பின்னுதித்
தகம்பயி லாரணத்
துறைந்து செப்புமுச்
சகம்புகழ்ந்
திடவருந் தக்க நீதியோய்.
26
(இ-ள்)
இம்மை மறுமையென்று சொல்லும் வண்ணம் வாரா நிற்கும் இரண்டிற்கும் சத்தியமாகப் பலயுகங்களும்
தோற்றமாகும் முன்னர்த் தோற்றமாகிய நபிமார்களுக்கெல்லாம் பின்னர் இவ்வுலகத்தின் கண்
அவதரித்து மனமானது பழகா நிற்கும் வேதங்களில் தங்கிச் சொல்லா நிற்கும் வானம், பூமி,
பாதாளமாகிய மூன்று லோகங்களும் துதித்திடும் வண்ணம் வந்த தகுதியான நீதியை யுடையவர்களே!
1624.
அண்டர்கள் பரவுநும் மடியை நாடொறுந்
தெண்டனிட்
டிருவிழி சிரசின் மீதுறக்
கொண்டசிற்
றடிமையே னுய்யக் கொண்டுவாய்
விண்டெனை
விளித்தவை விளம்பு கென்னவே.
27
(இ-ள்)
தேவர்களான மலாயிக்கத்துமார்கள் வணங்கா நிற்கும் தங்களின் பாதங்களைப் பிரதி தினமும்
வணங்கி இரண்டு கண்களிலும் தலையின் மீதும் பொருந்தும் வண்ணம் பற்றிய சிறிய அடிமையனான யான்
ஈடேறும்படி கொண்டு தங்களின் வாயைத்
|