பக்கம் எண் :

சீறாப்புராணம்

66


முதற்பாகம்
 

பின்னரும் ஊழ் வினையானது ஒன்றாக்கக் களங்கத்தைக் கொண்ட சந்திரனது அகட்டைத் தீண்டுஞ் சிகரத்தையுடைய அற்பா மலையினிடத்து இருவரும் கூடினார்கள்.

 

     134. கூடிய விருவர் தாமுஞ்சுத் தாவிற்

              குடியிருந் திருபது சூலி

         னாடிய பொருட்போ னாற்பது பெயரை

              நன்குறப் பெற்றதின் பின்னர்

         சூடிய கிரீட பதிநபி யமரர்

              துரைகணா யகமெனு மிறசூல்

         நீடிய வொளிவு சிறந்தொரு சூலி

              னிலமிசை சீதுதித் தனரே.

36

     (இ-ள்) அவ்வாறு கூடிய நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்களும் பீவி ஹவ்வா அலைகிஸ்ஸலா மவர்களும் சுத்தா வென்னும் நகரத்தில் குடியாகத் தங்கியிருந்து விரும்பிய திரவியத்தைப் போலும் இருபது சூலில் நாற்பது பேர்களை நன்மை பொருந்தும்படி பெற்றதின் பின்னர் மகுடத்தைத் தரித்த மன்னவராகிய நபிமார்களுக்கும் தேவர்களுக்குந் துரைகளான நாயகமென்று கூறும் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் நீட்சியைக் கொண்ட ஒளிவானது சிறப்புற்று ஒரு சூலில் சீது அலைகிஸ்ஸலா மவர்கள் இந்தப் பூலோகத்தின்கண் அவதரித்தார்கள்.

 

     135. மருமலர்த் திணிதோ ணிறைமதி வதன

             முகம்மதின் பேரொளி யிலங்கித்

         தெரிமறை ஆத மக்களிற் சிறந்த

             சீதுவி னிடத்திருந் ததனாற்

         பரிவுறு நபிப்பட் டமும்வரப் பெற்றுப்

             பல்கலைக் குரிசிலென் றேத்த

         வரியவன் கொடுத்த வரிசைக ணிறைந்த

             வைம்பது சுகுபிறங் கியதே.

37

     (இ-ள்) வாசனையைக் கொண்ட புஷ்ப மாலைகளைத் தரித்த திண்ணிய தோள்களையும் பூரணச் சந்திரன் போலும் முகத்தையுமுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் பெரிய ஒளிவானது பிரகாசித்து வேதங்களை யுணர்ந்த நபி ஆதமலை கிஸ்ஸலா மவர்களின் புத்திரர்களில் சிறப்புத் தங்கிய சீது அலைகிஸ்ஸலா மவர்களிடத்தில் இருந்ததனால் அவர்களுக்கு அன்பு பொருந்திய நபிப்பட்டமும் ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் சந்நிதானத்திருந்து வரப்பெற்றுப் பல வேத நூற்களினது குரிசிலென்று