பக்கம் எண் :

சீறாப்புராணம்

67


முதற்பாகம்
 

துதிக்கும் வண்ணம் அரியவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவானவன் கொடுத்த நிறைந்த வரிசைகளில் ஐம்பது சுகுபுகளும் இறங்கின.

 

 136. சீதுவி னிடத்தி னிருந்தவர் மதலை

              சிறந்தமா மணிமுடிக் குரிசின்

         மாதவன் கமல வதனயா னுசுதன்

              வயினுறைந் திருந்தணி சிறந்து

         தாதவிழ் மலர்த்தார்க் குங்குமக் கலவைத்

              தடப்புயன் யானுசு தருகார்

         நீதிசேர் கயினா னிடத்தினி லிருந்து

              நிலைபெற விளங்கிய தன்றே. 

38

     (இ-ள்) சீது அலைகிஸ்ஸலா மவர்களினிடத்து அவ்வாறு தங்கியிருந்து அவர்களின் மகனான சிறப்புத்தங்கிய மகத்தாகிய இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற கிரீடத்தையுடைய குரிசிலென்னும் மகா தவத்தினது தாமரை மலர் போலும் முகத்தையுடைய யானூசென்பவரின் பக்கத்தில் தங்கியிருந்து அழகானது சிறக்கப் பெற்று மகரந்தங்களைக் கொண்ட மலர்ந்த புஷ்பமாலைகளையும் குங்குமத்தினது கலவைச் சாந்தையும் பொருந்திய பெரிய தோள்களையுடையவரான அந்த யானூசென்பவர் இவ்வுலகத்தின் கண்தந்த மேகத்தை நிகர்த்த நிதியையுடைய ஹயினா னென்பவரிடத்திலிருந்து அவ்வொளிவானது நிலைமை பெறும் வண்ணம் பிரகாசித்தது.

 

     137. தண்மணிக் கதிர்விட் டெறிக்கும்வெண் கவிகைத்

              தடவரை மணிபுயக் கயினான்

         கண்மணி மகுலீ லிடத்தினி லிருந்து

              கவின்குடி கொண்டெழுந் தோங்கி

         வெண்மணித் தரளத் தொடைப்புய மகுலீல்

              வேந்தனுக் குற்றசே யெனவா

         ழுண்மைநன் னெறிசே ரெறுதுவி னிடத்தி

              னுறைந்தினி திலங்கிய தன்றே.

39

     (இ-ள்) குளிர்ச்சி தங்கிய இரத்தினங்களின் பிரகாசத்தை விட்டு வீசாநிற்கும் வெள்ளிய கொடையையும், பெரிய மலைகளை நிகர்த்த அழகிய தோள்களையுமுடைய ஹயினான் என்பவரின் கண்களினது மணியை யொத்த மகுலீ லென்பவரினிடத்தில் அவ்வொளிவானதிருந்து அழகானது குடிகொண்டு எழும்பி அதிகரித்து வெள்ளிய மணியாகிய முத்து மாலைகளைத் தரித்த தோள்களையுடைய அந்த மகுலீ லென்னும் மன்னவருக்கும் பொருந்திய புத்திரரென்று சொல்லும்படி வாழ்ந்து நல்ல