பக்கம் எண் :

சீறாப்புராணம்

71


முதற்பாகம்
 

     மாமதக் களிற்ற னறுபகு சதுமா

          மதலைசா லகுவயி னடைந்த

46

     (இ-ள்) அந்த ஷாமு என்பவரின் புதல்வர் அறுபகுசதுமனென்பவரிடத்தில் அவ்வொளியானது தங்கியிருந்து அகிற்கட்டையினது புகையும் புழுகும் தகரமும் கலவைச் சாந்தும் தோயப் பெற்று இருண்டு நெருங்கிய அழகிய கூந்தலையுடைய மாதர்களின் காமுகரென்று கூறும்படி செய்து அழகிய மணித்தோள்கள் கண் கொள்ளாத அழகானது இருந்து பிரகாசிக்கும் பெரிய மதத்தைக் கொண்ட யானை போல்பவரான அந்த அறுபகு சதுமாவென்பவரின் புதல்வர் சாலகு என்பவரின் இடத்துச் சேர்ந்தது.

 

     145. சாலகு தன்பா லடைந்துவாய் மைக்குந்

             தவத்திற்கும் பவுத்துக்கு மிவனே

         மேலவ னெனச்செய் திருந்தவன் மதலை

             வேந்தன்ஐ பறுவயின் புரந்து

         காலடி மறைக்கக் கவிழ்மத மிறைக்குங்

              கடகரி யரசன்ஐ பறுசேய்

         பாலகு வயின்வீற் றிருந்துல கெல்லாம்

              பரித்திடப் பண்புபெற் றதுவே.

47

     (இ-ள்) அந்தச் சாலகு என்பவரிடத்து அவ்வாறு சேர்ந்து சத்தியத்திற்கும் தவத்திற்கும் பவுத்திற்கும் இவரே மேலானவரென்று சொல்லும்படி செய்து இருந்து அவரின் புதல்வரான மன்னவர் ஐபறு என்பவரினிடத்துப் புரந்து கால்களினது சுவடுகளை மறைக்கும் வண்ணம் கவிழ்கின்ற மதத்தை சொரியும் கவுகளைக் கொண்ட யானைகளையுடைய மன்னவர் அந்த ஐபறு என்பவரின் புத்திரர் பாலகு என்பவரிடத்தில் அந்த வொளிவானது வீறுடன் தங்கி உலக முழுவதையும் தாங்கும்படி தகுதி பெற்றிருந்தது.

 

     146. தேன்கிடந் தொழுகுங் குங்குமத் தொடையற்

              செழும்புயன் பாலகு மதலை

         வான்கிடந் தனைய மின்னொளிர் வடிவாண்

              மன்னன்றா குவாவிடத் திருந்து

         கூன்கிடந் தனைய பிறைகறைக் கோட்டுக்

              குஞ்சரத் தரசர்கை கூப்ப

         மீன்கிடந் தலர்வான் மதியெனுங் கவிகை

              வேந்தர்வேந் தெனவிளைத் ததுவே.

48

     (இ-ள்) தேனானது கிடந்து ஒழுகப்பெற்ற குங்குமப் புஷ்பத்தினா லான மாலைகளை யணிந்த செழிய