|
முதற்பாகம்
திருமக நூகு
வயினுறைந் திருந்து
சிறந்தபே ரொளியினா லவர்க்குப்
பெருகிய நபிப்பட் டமுமிகப் பெறலாய்ப்
பிரளயப் பெருக்கெடுத் தெறியுங்
கருநிறக்
கடல்வங் கமுங்கவி ழாது
காட்சியாய்க் கலாசுபெற் றதுவே.
44
(இ-ள்) நல்ல புண்ணியத்தினது
சன்மார்க்கத்தினால் இவ்வுலக முழுவதையும் அரசாட்சி செய்யத்தகுந்த கீர்த்தியானது அந்த
லாமக்கு என்பவரின் தெய்வீகந்தங்கிய புத்திரர் நபிநூகு அலைகிஸ்ஸலாமவர்களினிடத்துத்
தங்கியிருந்து சிறப்புற்ற பெரிய அந்த வொளிவினால் அவர்களுக்கு மிக ஓங்கிய நபிப் பட்டமும்
அடைதலாகிப் பிரளயத்தினது நீர்ப் பெருக்கை எடுத்து வீசாநிற்கும் கரிய நிறத்தையுடைய
சமுத்திரத்தில் மரக்கலமும் கவிழாது ஆச்சரியமாக அதை விட்டும் கலாசு பெற்றது.
143.
வரிசையு
மிமையோர் துதிசெயும் பரிசும்
வரப்பெறு நூகுதன் மதலை
தரைபுகழ்ந்
தேத்தச் சாமிடத் திருந்து
தனபதி கனபதி யாக்கிக்
கருவிளை
விழியார் கவரிகா லசைப்பக்
கனகசிங் காதனத் திருத்தி
விரிகட
லுலகம் பொதுவறப் புரக்கும்
வேந்திவ னெனவியற் றியதே.
45
(இ-ள்) வரிசையும் தேவர்களாகிய
மலாயிக்கத்து மார்கள் போற்றுதல் செய்யும் பரிசும் வரப்பெற்ற நபிநூகு அலைகிஸ்ஸலாமவர்களின்
புதல்வர் சாமென்பவரிடத்து இந்தப் பூலோகமானது துதித்தேத்தும்படி அவ்வொளிவானது இருந்து
குபேரராகவும் பெருமையையுடைய அரசராகவுஞ் செய்து குவளைப் புட்பத்தைப் போலும் கண்களையுடைய
பெண்கள் சாமரத்தினால் காற்றை அசையும் வண்ணம் செய்யப் பொற்சிங்காதனத்தின்கண்
இருக்கப்படுத்தி விரிந்த சமுத்திரத்தையுடைய இப்பூமியைப் பொதுமையான அற அரசாட்சி செய்யும்
அரசர் இவரென்று சொல்லச் செய்தது.
144.
சாமுதன்
மதலை யறுபகு சதுமன்
றன்னிடத் தவதரித் திருந்து
தூமமும்
புழுகுந் தகரமுஞ் சாந்துந்
தோய்ந்திருண் டடர்ந்தபூங் குழலார்
காமுக
னெனச்செய் தணிமணிப் புயங்கள்
கண்கொளா தழகிருந் தொழுகு
|