பக்கம் எண் :

சீறாப்புராணம்

69


முதற்பாகம்
 

     140. நன்னெறி நயினா ரொளியிருந் ததனா

              நபியெனும் பட்டமும் பெறலா

         யுன்னுதற் கரிய முப்பது சுகுபு

              முடையவ னருளினா லிறங்கிப்

         பன்னிய வுலகத் தொழிலெவை யவைக்கும்

              பரிவுறு முதன்மையே யிவரென்

         றெந்நிலங் களுக்கும் பெயர்பெற வரசா

              யிருந்திட வியற்றிய தன்றே.

42

     (இ-ள்) நல்ல சன்மார்க்கத்தை உடைய நயினாரான நாயகம் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் ஒளிவானது அவ்வாறு தங்கியிருந்ததினால் நபியென்று கூறும் பட்டமும் பெற்று யாவற்றையும் சொந்தமாயுடையவனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினது கிருபையால் முப்பது சுகுபு மிறங்கிச் சொல்லுகின்ற இவ்வுலகத்தினது தொழில்கள் யாவற்றிற்கும் அன்பு பொருந்திய முதன்மையானவர் இந்த இதுநீசு அலைகிஸ்ஸலா மவர்களென்று கீர்த்திபெறும் வண்ணம் எந்நிலங்களுக்கும் அரசாக இருப்பதற்குச் செய்தது.

 

     141. மெய்த்தவக் குரிசி னபியிது ரீசு

              விருப்புற வுதித்தநன் மதலை

         யுத்தமன் மத்தூ சல்குதன் னிடத்தவ்

              வொளியுறைந் துலகெலா மிறைஞ்ச

         வைத்தபின் மத்தூ சல்குதன் மைந்தன்

              மடந்தையர் மடலெடுத் தேந்தச்

         சித்திரக் கவின்பெற் றிருந்தலா மக்கு

              வயின்சிறந் திலங்குமவ் வொளியே.

43

     (இ-ள்) சத்திய தவத்தைக் கொண்ட குரிசிலான அந்த நபி இதுரீசு அலைகிஸ்ஸலா மவர்கள் விருப்பமடையும் வண்ணம் இவ்வுலகத்தின்கண் தோற்றமாகிய நல்ல புதல்வரான மேன்மையர் மத்தூ சல்கு என்பவரிடத்தில் அந்நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் ஒளிவானது தங்கி எல்லா உலகங்களும் வணங்கும்படி வைத்த பின்னர் அந்த மத்தூசல் கென்பவரின் புத்திரராகிய பெண்களானவர் மடலெடுத்துத் தாங்கும் வண்ணம் ஆச்சரியமான அழகை யடைந்துறைந்த லாமக்கென்பவரிடத்தில் அவ்வொளிவானது சிறப்புற்றுப் பிரகாசித்தது.

 

      142. தருமநன் னெறியா லுலகெலாம் புரக்கத்

               தகும்புக ழானலா மக்குத்