|
முதற்பாகம்
நனிபொருண்
மறைத்தீ னவர்மனத் தெளிவி
னடுநிலந் தெளிதரக் குணக்கிற்
றினகரன்
கதிர்கள் வெளிறிடப் பரப்பித்
தெண்டிரைக் கடன்முளைத் தெழுந்தான்.
188
(இ-ள்) கூட்டமாகிய சங்குகளானவை
ஒலியா நிற்கும் வாவிகளினிடத்து அன்னப்பட்சிகள்
சத்திக்கவும், கீதத்தைக் கொண்ட ஓசையையுடைய
குயில்கள் கூவவும், மனத்தினது நிலைமையை
இன்னதென்றறியாத காபிர்களி னகத்தில் கொடிய இருட்
கூட்டமானது போய் நுழைந்து ஒளிக்கவும், மிகுத்த பொருளினது
புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய தீனுல்
இஸ்லாமென்னும் மெய் மார்க்கத்தையுடையவர்கள் மனசினது
தெளிவைப்போல இவ்வுலகமானது தெளியச் சூரியனானவன்
கிழக்கில் தனது கிரணங்களை வெளிறும் வண்ணம் விரித்து
தெள்ளிய அலைகளையுடைய சமுத்திரத்திலிருந்து
வெளிப்பட்டு எழுந்தான்.
|