|
புறப
முதற்பாகம்
புறப்பல நகரிற் சமயமுஞ்
சிதையப்
புதுமறை
யெனும்புறுக் கானி
லுறப்படுத் துலக மடங்கலு மிவன்ற
னுள்ளடிப்
படுக்குமென் றுரைப்பார்.
186
(இ-ள்) அன்றியும், அபூஜகிலென்பவன்
வெற்றியை யுடைய பெரிய சேனைகளைக் கொண்டு செய்யா
நிற்கும் செய்கைகளும் அதிகப்பட்ட தந்திரங்களும்
பாலைநிலத்தின்கண் பல கருமணற்களைக் கொழிக்கும்
வண்ணம் நதியை வரவழைத்த அஹ்மதென்னும் திருநாமத்தைப்
பெற்ற முகம்மதென்பவரிடத்தில் அணுகாது. பலவாகிய
புறநகரங்களில் பழைய மார்க்கமும் சிதைவுறப் புதிய
வேதமென்னும் புறுக்கானுல் அலீமில் பொருந்த அகப்படுத்தி
உலக முழுவதும் இந்த முஹம்மதென்பவனின் பாதத்தினகம்
கிடக்குமென்று சொல்லுவார்கள்.
1937. தெரிமறை
மாலிக் கருளர சறியாச்
சிந்தைய
னெனவுமா மதியை
வரவழைத் தரிய காட்சியை
முடித்த
முகம்மதை
வஞ்சக னெனவும்
பெருகிய குபிரர் தனித்தனி
யுரைப்பப்
பெருஞ்சிறைத் திரண்டமுள் வளைவாய்க்
குருதிகொப் பிளித்த வேதினச்
சூட்டுக்
குக்குடந்
திசைதொறுங் கூய.
187
(இ-ள்) அன்றியும், வேதங்களை யுணர்ந்த
மாலிக்கென்பவன் இவ்வுலகத்தின்கண் தந்த ஹபீபரசனை
அறியாத மனதையுடையவனென்று, மகத்தாகிய சந்திரனை
வரவழைத்து அரிய காட்சியை நிறைவேற்றிய நாயகம்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை
வஞ்சகனென்றும், அதிகரித்த காபிர்கள் தங்களில்
தனித்தனி கூற, பெரிய சிறகுகளையும் திரண்ட முட்களையும்
வளைந்த சுண்டையும் இரத்தத்தைக் கொப்பளிக்கப் பெற்ற
ஈர்வாளையொத்த உச்சிக் கொண்டையையுமுடைய
சேவற்களானவை திசைகள் தோறுங் கூவியன.
1938. இனவளை முரலுந் தடத்தன மிரைப்ப
விசைக்குரற் கோகில மியம்ப
மனநிலை யுணராக் குபிரர்தம்
முளத்தில்
வல்லிருட்
குலம்புகுந் தொளிப்ப
|