பக்கம் எண் :

சீறாப்புராணம்

723


முதற்பாகம்
 

அலையைப் போலச் சாமரங்க ளிரட்டவும், தோலினாலான வாரையணியப் பெற்ற வெற்றி முரசமானது ஒலிக்கவும், பெருங் கோபத்தைக் கொண்ட சிங்க ரூபம் தீட்டிய துவஜமானது முன்னாற் பிரகாசிக்கவும், வேதத்தலைவர்கள் இருபக்கங்களிலும் நீங்காது மற்றும் அரசர்கள் கூடவரும் வண்ணம் தொலையாத காரணங்களை யுடைய குரிசிலாகிய நாயகம் நபி றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினிடத்தில் வந்து சேர்ந்தான்.

 

1941. செம்மலர்ப் பதத்தில் வெண்கதிர் குலவுஞ்

          செழுமணி முடிசிரஞ் சேர்த்தித்

     தம்மினத் தவர்க ளுடன்சலா முரைத்துத்

          தக்கதோ ரிடத்துநின் றவனை

     வம்மெனத் திருவா யிரையருள் கொடுத்து

          முகம்மது மருங்கினி லிருத்தி

     வெம்மையி னமுதக் கனியெனுங் கலிமா

          விளம்புக வெனவிரித் துரைத்தார்.

3

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்து சிவந்த தாமரை மலர்போலும் இரு பாதங்களிலும் தனது வெள்ளிய கிரணங்கள் பிரகாசியா நிற்கும் செழுமை தங்கிய இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மகுடமணிந்த தலையைப் பொருத்திப் பணிந்து தமது கூட்டத்தார்களோடும் சலாங் கூறித் தகுதியாகிய ஓர் தானத்தில் நின்ற அந்த ஹபீபரசனை, நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வருவாயாக வென்று தங்களின் தெய்வீகம் பொருந்திய வாயினது கிருபை தங்கிய வார்த்தையைக் கூறி யழைத்துப் பக்கத்தி லுட்காரச் செய்து ஆசையைத் தருகின்ற அமுதத்தைக் கொண்ட கனியென்னும் கலிமாவைச் சொல்லுக வென்று விரிவாய் எடுத்துச் சொன்னார்கள்.

 

1942. நன்றெனப் புகழ்ந்து மனங்களித் தெழுந்து

          நரபதி திமஸ்கினுக் கரசன்

     வென்றிகொ ளரசே யினமொரு வசனம்

          வினவுதல் வேண்டுமென் னிடத்தி

     லென்றவ னுரைப்ப முகம்மது நபியு

          மின்புறு முறுவல்கொண் டினிதாய்த்

     துன்றுமென் மனத்திற் றெரிந்ததுன் மகடன்

          றொல்வினை தெளிப்பதற் கென்றார்.

4

      (இ-ள்) அவ்விதம் சொல்லவே, மனுடாதிபதியாகிய திமஸ்கு நகரத்தினது அரசனான ஹபீபென்பவன் நல்லதென்று புகழ்ந்து மனமானது மகிழப் பெற்று எழும்பி வெற்றியைக் கொண்ட அரசரானவரே! என்னிடத்தில் இன்னமொரு வார்த்தை கேட்டருள