பக்கம் எண் :

சீறாப்புராணம்

724


முதற்பாகம்
 

வேண்டுமென்று கூற, நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் இனிமை பொருந்திய புன்சிரிப்புக் கொண்டு நீ கூறப்போகும் சமாச்சாரமானது இன்பமாய் நெருங்கிய எனது மனதின்கண் தெரிய வந்தது. அதென்னவெனில் உன்னுடைய மகவினது பூர்வீக வினையைச் சுத்தப்படுத்துவதற்கென்று சொன்னார்கள்.

 

1943. ஆண்டகை யுரைத்த புதுமொழி நறுந்தே

          னகத்தினிற் புகுந்துடல் களித்து

     வேண்டுநற் பதவி படைத்தனன் சிறியேன்

          விளைத்திடும் பவக்கட றொலைத்தேன்

     காண்டகாப் புதுமை யனைத்தையுந் தெரிந்தேன்

          கடிகம ழணிமலர்ப் பதத்தைத்

     தீண்டவும் பெற்றே னினியரும் பொருளொன்

          றிலையென வுரைத்தனன் றிறலோன்.

5

      (இ-ள்) ஆண்டகையான நமது நாயகம் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய ஆச்சரியத்தைக் கொண்ட வார்த்தையாகிய நறியதேனானது மனசின்கண் நுழைந்து உடற் களிப்படைந்து வீரியத்தையுடையவனான ஹபீபரசன் சிறியேனாகிய யான் வேண்டா நிற்கும் நன்மை பொருந்திய மோட்ச பதவியைச் சம்பாதித்தேன். செய்திடும் பாவமாகிய சமுத்திரத்தைத் தொலைக்கப் பெற்றேன். காணமுடியாத அற்புதங்கள் யாவையுங் கண்டு கொண்டேன். வாசனையானது கமழப் பெற்ற அழகிய தாமரை மலரை யொத்த தங்களின் இரு பாதங்களையும் கைகளினால் தீண்டவும் பெற்றேன். இனி யெனக்கு வேண்டுதலான அரிய பொருளானது வேறே யொன்று மில்லை யென்று சொன்னான்.

 

1944. புதியவன் றூதர் முகம்மதுந் திமஸ்கைப்

          புரந்திடு மருந்தவத் தவனு

     மதுரமென் மொழியா லளவளா யுளங்கள்

          மகிழ்ந்தினி திருக்குமக் காலைக்

     ககனிழிந் தரிய பெருஞ்சிறை யொடுக்கிக்

          கடிதினிற் கண்ணிமைத் திடுமுன்

     செகதலத் துறைந்த நபியிடத் துவந்தார்

          தெரிமறை கொடுசிபு ரீலே.

6

      (இ-ள்) புதிய ஆலத்தையுடைய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தூதராகிய நாயகம் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் திமஸ்கு நகரத்தை அரசாட்சி செய்யா நிற்கும் அரிய