|
முதற்பாகம்
தவத்தையுடைய
ஹபீபரசனும் இனிமை தங்கிய மெல்லிய வார்த்தைகளினால்
கலந்து இருவர்களின் மனங்களும் மகிழ்ச்சியுற்று
இன்பத்துடன் இருக்கின்ற அச்சமயத்தில், ஜிபுரீல்
அலைகிஸ்ஸலா மவர்கள் தெரிதலான வேத கட்டளையைக்
கொண்டு விரைவினில் வானலோகத்தை விட்டு மிறங்கி
கண்களை மூடி விழிக்கு முன் அரிதாகிய தமது பெரிய சிறகுகளை
யொடுக்கிக் கொண்டு பூதலத்துறைந்த அந்நபிகள்
பெருமானிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
1945. மருங்கினி
லெவர்க்குந் தோன்றிடா துறைந்து
வல்லவன் சலாமெடுத் தியம்பிப்
பெருங்குலம் விளக்கு முகம்மதை நோக்கிப்
பிறழ்ந்துருத் தோன்றிலாத் தசையை
நெருங்குவெண் கொடிக்கஃ பாவிடத் தேகி
நிரைமயிர்ப் போர்வையான் மூடி
யருங்கதிர்க் கலசத் தாபுசம் சத்தி
னரியநீர் கரங்கொடு தெளித்தே.
7
(இ-ள்) அவ்விதம் வந்து சேர்ந்த
ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்கள் நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பக்கத்தில்
யாவருக்குந் தெரியாது தங்கிப் பெரிதாகிய தீன்குலத்தை
விளங்கச் செய்யும் அந்நபிகள் பெருமானவர்களின்
முகத்தைப் பார்த்து வல்லவனான ஹக்கு சுபுகானகுவத்த
ஆலாவினது சலாமெடுத்துச் சொல்லி உலகத்தின்கண்
அவதரித்து வடிவமானது தோற்றப் பெறாத அந்த ஹபீபரசனது
மகத்தாகிய தசைக் கட்டியை வெள்ளைக் கொடிகளானவை
நெருங்கப் பெற்ற கஃபத்துல்லா விடத்தில் சென்று
உரோமத்தால் நிறைந்த ஓர் போர்வையினால் மூடி ஆபுசம்ச
மென்னும் கிணற்றினது அருமையான தண்ணீரை அரிய
பிரகாசத்தைத் தருகின்ற ஒரு கலசத்தில் கொண்டு
தங்களின் கைகளினால் தெளித்து.
1946. இறைவனை நோக்கித்
துவாவிரந் தினிரே
லிலங்குருத் தோன்றுமென் றிசைத்துச்
சிறைநிறந் தோன்றா தமருல கதனிற்
செபுறயீ லேகிய பின்னர்
கறைநிறங் குலவுஞ் செழுங்கதிர் வடிவேற்
கரதல முகம்மது நயினா
ரறைமுர சதிரத் திமஸ்கிறை யவனு
மெழுந்தன ரரியகஃ பாவில்.
8
(இ-ள்) இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த
ஆலாவினது சந்நிதானத்தைப் பார்த்து துஆக் கேட்பீரே
யானால் விளங்குகின்ற
|