பக்கம் எண் :

சீறாப்புராணம்

817


முதற்பாகம்
 

ஜனங்களைக் கூப்பிட்டு நீங்கள் வாக்கு மாறாது ஒருவருக்கும் ஒரு சத்துருத்துவ மில்லை யென்று சொல்லும் வண்ணம் வழிப்பட்டு இருங்களென்று அந்தத் தலத்தவர்களுக்கும், பந்துக்களுக்கும் எடுத்துக் கூறினார்.

 

2195. கடந்த மும்மதக் கரிதொடு குழியினைக் கடவா

     தடைந்த வாறெனக் கிடந்திடும் பெரியதந் தையரைப்

     படர்ந்த நன்கலி மாச்சொலுஞ் சொலுமெனப் பகர்ந்தார்

     தொடர்ந்து வானவர் பரவிட வருமிற சூலே.

4

      (இ-ள்) தேவர்களான மலாயிக்கத்து மார்கள் துடர்ச்சி யுற்று வணங்கும் வண்ணம் வரா நிற்கும் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தாண்டிய கன்னமதம், கைமதம், கபோல மதமென்னு மூன்று மதங்களை யுடைய யானையானது தொட்ட குழியைக் கடவாது அதிற்றானே அடைந்த மார்க்கத்தைப் போலுங் கிடக்கும் தங்களின் பெரிய தந்தையராகிய அபீத்தாலி பென்பவரை விரிந்த நன்மை பொருந்திய ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மது றசூலுல்லாஹிழு யென்னும் கலிமாவைக் கூறுங்கள்! கூறுங்கள்!! என்று சொன்னார்கள்.

 

2196. காதி னுட்புகுந் தனவிலை யெனப்பினுங் கருதி

     யோது நன்கலி மாவென முகம்மது முரைக்கும்

     போதி னிற்றனி யழன்றபூ சகுலுடல் புழுங்கி

     மோதி வந்தபுத் தாலிபுக் குரிமையின் மொழிவான்.

5

      (இ-ள்) நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் நாம் அவ்வாறு கூறியவைகள் காதுட் புகுந்தனவோ? இல்லையோ? என்று பின்னருஞ் சிந்தித்து நன்மை பொருந்திய கலிமாவைக் கூறுங்களென்று சொல்லும் சமயத்தில் அபூஜகிலென்பவன் ஒப்பறக் கோபித்துச் சரீரம் வெம்பி மோதுதலுற்று வந்து அபீத்தாலி பென்பவருக்குச் சொந்தத்தில் சொல்லுவான்.

 

2197. தந்தை தாய்தம ரொழுகிய மொழிவழி தவிர்ந்திட்

     டிந்த நாளினின் முகம்மதி னுரையினுக் கியைந்தீர்

     பிந்து நாளையின் முன்னுரை மறைநெறி பிசகா

     தந்த வாய்மையை மனத்தினின் மறவலென் றறைந்தான்.

6

      (இ-ள்) இத்தினத்தில் நமது பிதா, மாதா, பந்துக்கள் நடந்த சொல்லினது மார்க்கத்தைத் தவிர்த்து முகம்மது என்பவனின் வார்த்தைகளுக்குப் பொருந்தினீர். பிந்திய காலத்தில் ஆதியிற் கூறிய வேத மார்க்கத்திற் தவறாது அந்தச் சத்தியத்தை இருதயத்தின் கண் மறக்கக் கூடாது என்று கூறினான்.