முதற்பாகம்
2331.
வன்றி றற்புலி
வாளலி முன்வர
மின்ற வழ்ந்தணி
யாரங்கள் வீசிடத்
தொன்று தோன்றிய
தூதுவர் மாமனை
முன்றி லெங்கணு
மொய்த்திருந் தார்களால்.
4
(இ-ள்)
கொடிய வல்லமையை யுடைய புலி யாகிய வாளாயுதத்தைக் கொண்ட அலி றலியல்லாகு அன்கு அவர்கள்
முன்னால் வரவும், மாலைகளினது பிரகாச மானது தவழப் பெற்று அழகை வீசவும், ஆதியில் விளங்கிய
தூதுவரான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் மகத்தாகிய
மாளிகையினது முற்றத்தி லெவ்விடத்தும் வந்து நெருங்கியிருந்தார்கள்.
2332.
சிறியர் பேதையர்
தீய்ப்பசி தீண்டிய
வறிய ரல்லது வந்தவர்
நாற்பஃ
தறிவ ராசிம்
கிளைக்குயி ராயினோ
ரிறைவன் றூதுவர்க்
கின்புறு மாந்தரே.
5
(இ-ள்) சிறியவர்களும்
பெண்களும் கொடிய பசியானது தீண்டப் பெற்ற தாரித்திரர்களு மல்லாமல் அங்கு வந்து சேர்ந்தவர்கள்,
இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவ ராகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களுக்கு இனிமையுறும் அறிவாளர்களும் ஹாஷிம்கிளைக்கு ஜீவனானவர்களுமான நாற்பது
மாந்தர்கள்.
2333.
எடுத்தி றாத்த லெனும்பதி
னாறெடை
கொடுத்த பாலுங்
குடித்தொரு மேழகத்
தடித்த சைச்சுடு
கோலினிற் றள்ளுமு
னெடுத்துத் தின்ப
ரிவர்சிறி யோர்களே.
6
(இ-ள்) இவர்களில்
சிறியோர்கள் இறாத்த லென்று கூறும் பதினாறு எடை எடுத்துக் கொடுத்த பாலும் அருந்தி ஒரு ஆட்டினது
தடித்த மாமிசத்தைச் சுடுகின்ற கோலில் தள்ளுவதற்கு முன்னர் எடுத்துப் புசிக்கப் பட்டவர்கள்.
2334.
வரிசை வள்ளன் முகம்மது
வந்துநின்
றுரிய கேளி
ருடனுழை யோரையும்
விரியுங் காந்தி
விரித்த விரிப்பின்மேற்
பரிவி னீணவை பந்திவைத்
தாரரோ.
7
(இ-ள்) வரிசையைக்
கொண்ட வள்ளலான நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வந்து நின்று
அன்புடன் சொந்தமாகிய பந்துக்களோடு
|