| 
 முதற்பாகம் 
  
பக்கத்திலுள்ளவர்களையும்
விரியா நிற்கும் பிரகாசத்தைப் பரப்பிய விரிப்பின் மீது நீண்ட ஆச்சரியத்தைப் பெற்ற பந்தியாக
வைத்தார்கள். 
  
2335. 
மாற்ற லர்க்கரி
யேறெனும் வள்ளலார் 
     தீற்று வெண்சுதை
மாடத்துட் சென்றட  
     வூற்றுப் பாலையு
மூற்றிக்கொண் டிங்ஙனஞ் 
     சோற்றை
யுங்கொடு வாவெனச் சொல்லினார். 
8 
      (இ-ள்) அன்றியும்
சத்துராதிக ளென்னும் யானைகளுக்கு ஆண் சிங்கத்தை நிகர்த்த வள்ளலான நாயகம் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வெள்ளிய சுண்ணச் சாந்தைத் தீற்றப் பெற்ற தங்களின்
மாளிகையினகம் சென்று காச்சும்படி யூற்றிய பாலையும் வார்த்துக் கொண்டு சோற்றையும் இவ்விடத்திற்குக்
கொண்டு வாவென்று கூறினார்கள். 
  
2336. 
மருங்கு நின்றவர்
மாமனை யுட்புகுந் 
     தொருங்கி ருந்த
வொருபடிச் சோற்றையுங் 
     கருங்க லென்னுங்
கலசத்திற் பாலையுந் 
     தருங்கை வள்ள லிடங்கொடு
சார்ந்தனர். 
9 
      (இ-ள்) அவர்கள்
அவ்வாறு கூறப் பக்கத்தில் நின்றவர்கள் மகத்தாகிய மாளிகையினகம் நுழைந்து ஒன்றாயிருந்த
ஒருபடி அன்னத்தையும், கரிய கல்லென்று சொல்லும் கலசத்தின் கண்ணிருந்த பாலையும், கொடையை
யருளா நிற்கும் கைகளையுடைய வள்ளலான நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களினிடத்தில் கொண்டு வந்தார்கள். 
  
2337. 
அருத்துஞ் சோற்றையும் பாலையு மங்கையி
     லொருத்த ரேந்தி
யுலாவுகின் றாரிவர் 
     வருத்த மின்றி
வரவழைத் தாளெலா 
     மிருத்து கின்றன
ரென்னெனக் கூறுவார். 
10 
      (இ-ள்) அப்போது
அங்கு வந்திருந்த ஜனங்கள் ஒருவர் அருத்தா நிற்கும் அன்னத்தையும் பாலையும் அழகிய கைகளில் ஏந்தி
யுலாவுகின்றார். இந்த நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
மனுஷியர்களை யெல்லாம் துன்ப மில்லாமல் வரும்படி செய்து இருத்துகிறார். இது என்ன? என்று
சொல்லுவார்கள். 
 |