பக்கம் எண் :

சீறாப்புராணம்

936


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வா றுடன்பட்ட கீர்த்தியைத் தரா நிற்கும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நமது நாயகனான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் றசூலாக நபியென்று கூறும் பட்டத்தைப் பூண்டு வந்த ஒழுங்கினை யுடைய வருடம் பதினான்கில் றபீயுல் அவ்வலெனும் மாதத்தினது தொகுதியில் விளங்கா நிற்கும் ஐந்தாந் தேதியில் திங்கட் கிழமை யிராவில் சிறப்புடன் திரு மதீனா வென்று கூறும் பெரிய பட்டினத்திற்குப் பிரயாணித்துச் செல்லும் வணமிருந்தார்கள். இச் சமாச்சாரம் காபிர்களின் காதுகளுக்குத் தோற்றமாயிற்று.

 

2531. இற்றையி னிரவின் முகம்மது மதீனத்

          தேகுதற் கிசைந்திருந் தனரென்

     றொற்றரி லிபுலீ சுரைத்திடு மொழிகேட்

          டூரவ ரனைவருந் திரண்டு

     பற்றறும் உக்பா வுத்துபா முதலப்

          பாதக னபூசகு லுடனு

     முற்றுறுங் கதிர்வாட் கரங்களி னேந்தி

          முரட்பெருங் கணத்தோடு மெழுந்தார்.

66

      (இ-ள்) அவ்விதந் தோற்ற மாகத் தூதர்களைப் போலும் இபுலீசு லகுனத் துல்லா வென்பவன் முகம்ம தென்பவர் இன்றைய இராப் பொழுதில் திரு மதீனமா நகரத்திற்குச் செல்லும் வண்ணம் மனதினிடத்துப் பொருந்தி யிருக்கின்றாரென்று கூறுஞ் சமாச்சாரத்தை அந்த ஊரி லுள்ள காபிர்கள் யாவர்களும் காதுகளினாற் கேள்வியுற்று அன்பற்ற உக்பா, உத்துபா முதலிய அந்தத் துரோகியான அபூஜகி லென்பவனோடும் ஒன்று கூடி முழுவதும் பொருந்திய பிரகாசத்தை யுடைய வாளா யுதங்களைக் கைகளில் தாங்கிக் கொண்டு மாறுபாட்டையுடைய பெரிய கூட்டத்துடன் எழும்பினார்கள்.

 

2532. அறபிகள் குலத்தின் முதியர்போ லிபுலீ

         Êசானவ னவர்கண்முன் னடப்ப

     வுறைதரும் பவத்துக் கொருவருக் கொருவ

          ருரைக்கொணாப் பாஷைக ளுரைத்து

     மறுவறு மடங்க லேற்றினங் கிடந்த

          மலைமுழைஞ் சினைக்கொறித் திரள்க

     ளறவளைந் ததுபோற் காபிர்க ளெவரு

          மகுமது மனையினை வளைந்தார்.

67

      (இ-ள்) அவ்வா றெழும்ப, இபுலீசு, லகுனத் துல்லா வென்பவன் அறபிகளின் கூட்டத்தினது மூத்தோரைப் போலும்