|
இரண்டாம் பாகம்
அந்தக் காபிர்களின் முன்னால்
நடக்க, உறையா நிற்கும் பாவத்தொழிலுக்காக ஒருவருக்கொருவர் கூறத் தகாத சபத வார்த்தைகளைக்
கூறி நடந்து களங்கமற்ற ஆண் சிங்கத்தினது வருக்கமானது கிடக்கப் பெற்ற பருவதக் குகையை ஆட்டின்
கூட்டங்கள் முழுவதுஞ் சூழ்ந்ததை நிகர்த்து அந்தக் காபிர்களியாவரும் மகுமூ தென்னுந் திரு நாமத்தை
யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி அகமது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் வீட்டை வந்து சூழ்ந்தார்கள்.
2533.
தெருவினும் வாயிற் புறத்தினுங்
கதிர்க
டிகழ்சுதை மாளிகைப்
புறத்தும்
பெருகிய திருமுன் றிலின்செழும்
புறத்தும்
பிறங்கிய திருமதிட்
புறத்து
நிரைநிரை காபிர் செறிதிர
ணெருங்கி
நின்றன ரிருந்தன ரவரி
லொருவரி னொருவர் பிரிந்திடா
துறைந்தாங்
குரவரிற் சிலவர்சொல்
லுவரால்.
68
(இ-ள்) அப்படிச் சூழ்ந்த
நெருங்கிய கூட்டத்தை யுடைய அந்தக் காபிர்கள் வரிசை வரிசையாக நெருக்க முற்று வீதியின் பக்கத்திலும்
வாயலினது பக்கத்திலும் கிரணங்கள் பிரகாசியா நிற்கும் வெண் சுண்ணச் சாந்தை யுடைய மேன் மாடத்தினது
பக்கத்திலும் பெருக்கமுற்ற தெய்வீகந் தங்கிய செழிய முற்றத்தினது பக்கத்திலும் ஒளிருகின்ற
அழகிய மதிள்களினது பக்கத்திலும் சிலர் நின்றார்கள். சில ரிருந்நார்கள். அவ்வாறு
ஒருவருக்கொருவர் நீங்காமல் தங்கிய அவ்விடத்தில் அவர்களிற் புத்திசாலிகளிற் சில புத்திசாலிகள்
சொல்லுவார்கள்.
2534.
இருந்திடந் தோற்றா திமைக்குமுன்
பறப்ப
னெவர்கணுந் தெரிகிலா
தொளிப்ப
னருகிருந் தவரை மதிமயக்
கிடுவ
னறிகிலா வேற்றுரு வெடுப்பன்
வெருவியிங் கெவரு நாவழங்
காமல்
விழித்தது விழித்ததா
யிருப்பக்
கருவிளைத் திடுவன் முகம்மது
படித்த
மாயங்கள் கவலுதற் கரிதே.
69
(இ-ள்) அந்த முகம்ம தென்பவன்
விஞ்சைக் கருவினால் தான் தங்கி யிருந்த விடமானது பிறருக்குத் தோற்றாத வண்ணம் கண்களை மூடி
விழிக்கு முன்னர் பறந்து செல்லுவான். யாவரின் கண்களுக்குங் காணாது மறைவான். பக்கத்தி
|