பக்கம் எண் :

சீறாப்புராணம்

938


இரண்டாம் பாகம்
 

லுட்கார்ந்திருந்தவர்களை அவர்களின் புத்தியானது மயங்கும்படி செய்வான். ஒருவருக்குந் தெரியாதவாறு வேறு விதமான வடிவங்களை எடுப்பான். எல்லாரும் அச்சமடைந்து தங்களின் நாவானது பேச முடியாத விதத்தில் கண்களைத் திறந்தது திறந்த வண்ண மிருக்கும்படி செய்வான். அவன் கற்ற கபட வித்தைகள் சொல்லுவதற் கரியன வாகும்.

 

2535. இல்லகத் துளனோ புறத்தடைந் தனனோ

          வெவரறி குவர்வளைந் தவரிற்

     கல்லகங் குழைய விலங்கின மலையக்

          கற்றிடு மாயமந் திரத்தா

     னொல்லையி னெதிர்ந்தா னெனிற்றொடர் பவரா

          ருயிர்செகுத் திடவளைந் திருந்தார்

     வில்லணித் தடக்கை வீரர்கள் பலபா

          லென்கொலோ விளைவதென் றுரைத்தார்.

70

      (இ-ள்) அம் முகம்ம தென்பவன் இப்போது வீட்டினுள் ளுரைந் திருக்கின்றானோ? அல்லது வெளியிற் போயிருக்கின்றானோ? அச் சமாச்சாரத்தை இங்கு சூழ்ந்தவர்களில் அறிவார் யாவர்? ஒருவருமில்லர். அவன் மலைகள் நெகிழ்ந்தொன்றாகவும் மிருகச் சாதிகள் தடுமாறவும் படித்த கபட மந்திரத்தினால் நம்மோடும் விரைவில் வந்து எதிர்ப்பானேயானால் அவனது ஆவியைப் போக்கும் வண்ணம் அவனோடு இங்கு சூழ்ந் திருப்பவர்களான கோதண்டத்தைத் தரித்த பெரிய கையையுடைய சூரர்களில் பல பக்கத்தும் பின் றொடர்ந்து செல்லுவார் யாவர்? ஒருவரு மில்லர். ஆதலால் இனி உண்டாவது என்னவோ? என்று கூறினார்கள்.

 

2536. எடுத்தெடுத் தெவரும் வெருவுறு மாற்ற

          மியம்புதல் விடுத்திரில் லகத்துட்

     படுத்தனன் கரந்து போயின னலனோர்

          கடிகையி னமர்கையிற் படுவன்

     றொடுத்திடுங் கரும முடித்தனந் துணிந்த

          துணிவைவிட் டையுற லெனச்சொற்

     கொடுத்திபு லீசு காபிர்தம் மனங்கள்

          குறைவறத் திருத்தியங் கிருந்தான்.

71

      (இ-ள்) அவ்வாறு கூற, இபுலீசு லகுனத்துல்லா வென்பவன் யாவரும் பயப்பபடா நிற்கும் வார்த்தைகளை எடுத்தெடுத்துப் பேசுவதை விடுங்கள். அந்த முகம்ம தென்பவன் வீட்டினகஞ் சயனித்திருக்கின்றான். வெளியில் ஒளித்துப் போயின னல்லன். ஒரு நாழிகை நேரத்தில் நமது கைகளிற் சிக்குவான். நாம் ஆரம்பித்த