|
இரண்டாம் பாகம்
காரியத்தை அப்போது நிறைவேற்றி
விடுவோம். நீங்கள் முயன்ற முயற்சியை விட்டுஞ் சந்தேகிக்க வேண்டா மென்ற வார்த்தைகளைக்
கூறி அவ் விடத்திருந்த காபிர்களி னிதயங்களை குற்ற மறும் வண்ணஞ் செவ்வைப் படுத்தி அங்கு தங்கியிருந்தான்.
2537.
உரப்பிய வுரைகண் மறுத்துநித்
திரையை
யொழித்திடுந் திசைதிசை
பதின்ம
ரிருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்
றுலவி
யெவ்வழி யினும்விழி
பரப்புங்
கரப்பிட மினிமற் றில்லைமா
மதீனாக்
காண்பது மரிதவன்
மார்க்கம்
விரிப்பது மொழிந்த தின்றென
வுரைத்து
வீறுட னுபூசகு லிருந்தான்.
72
(இ-ள்) அவன் அவ்விதந்
தங்கியிருக்க, அபூஜகி லென்பவன் பெருமையோடும் நீங்கள் வாயா லதட்டிப் பேசுகின்ற வார்த்தைகளை
மறுதலித்து உறக்கத்தை அகற்றுங்கள். திசைகடோறும் பத்துப் பேர்கள் தங்களினி னுறை விடத்தை
விட்டும் பெயர்ந்து எப் பாதைகளிலும் நின்று நின்று உலாவிக் கண்களைப் பரவச் செய்து
பாருங்கள். அந்த முகம்ம தென்பவனுக்கு இனி ஒளிக்கு மிடம் பிறிதில்லை. அவன் பெருமையை யுடைய திரு
மதீனமா நகரத்தைப் பார்ப்பது மருமையாகும். இன்று அவன் தனது தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை
எவ்விடத்தும் பரப்புவதும் முடிந்த தென்று சொல்லியிருந்தான்.
2538.
நபிமுகம் மதுவைத் தீவினை
யிருளைத்
துடைத்திடு நறுஞ்சுடர்
மணியைக்
கவலுதற் கரிய கொலைசெய நினைத்துக்
காபிர்கள் வளைந்தவ
ணிருப்பப்
புவனமும் விசும்புஞ் செறிந்திருட்
படலம்
போர்த்ததவ் விரவினிற்
றுயிலொன்
றவரவர் கருத்துங் கண்களு
மயங்கத்
தலைகுழைத் தசைப்பவந்
தடுத்த.
73
(இ-ள்) நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை பாவமாகிய அந்த காரத்தை
யில்லாமற் சுத்திப் படுத்தும் நறிய பிரகாசத்தை யுடைய இரத்தினத்தை, கூறுதற் கரிதான கொலைத்
தொழிலைச் செய்யும் வண்ணம் கருதி அவ்வாறு காபிர்கள் சூழ்ந்து அவ்விடத்திற் றங்கி யிருக்க,
அந்தகாரப் படலம் இப் பூமியும் வானமு மறையும்படி நெருங்கி மூடிற்று. அந்த இராப் பொழுதில் ஓர்
நித்திரையானது
|