|
அங
இரண்டாம் பாகம்
அங்கு கூடியிருந்த அவரவர்களின்
மனங்களும் கண்களும் மயங்கவும் சிரத்தை வளைத்து அசைக்கவும் வந்து நெருங்கிற்று.
2539.
சாய்ந்துடன் முடக்கிக் கிடப்பவர்
சிலர்வாட்
டனைமறந் தணிமுக முழந்தாட்
டோய்ந்திடத் துயின்றோர்
சிலருட னிமிர்த்துச்
சுடரிணைக் கருவிழி
செருக
மாய்ந்தவர் போலக் கிடந்தவர்
சிலர்வெண்
மணியிதழ் விரிப்பவைம்
புலனுந்
தேய்ந்தற வொடுங்கிக் கிடந்தவ
ரெவருந்
திருமனைப் புறந்தொறுஞ்
செறிந்தே.
74
(இ-ள்) அவ்வாறு
நெருங்க, தெய்வீகந் தங்கிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களின் வீட்டினது எப்பக்கங்களிலும் சரிந்து தங்களின் சரீரங்களை முடக்கிக்
கொண்டு படுத்தவர்கள் சிலர், தங்களின் கைகளிலிருந்த வாளாயுதத்தை மறந்து அழகிய வதனமானது முழங்காலில்
தோயும் வண்ணம் சயனித்தவர்கள் சிலர், தங்களின் தேகங்களை நிமிரச் செய்து பிரகாசத்தை யுடைய
கண்களிலுள்ள இரு கருவிழிகளும் சொருகும்படி இறந்தவர்களைப் போல கிடந்தவர்கள் சிலர், இவ்விதம்
வெண்ணிறத்தைக் கொண்ட முத்தைப் போன்ற அதரங்கள் விரியப் பஞ்ச புலன்களும் குறைந் தழியும்
வாறு ஒடுக்க முற்று நெருக்கிக் கிடந்தார்கள்.
2540.
தனைமதித் தடர்த காபிரின்
குலமுந்
தறுகண னெனுமிபு லீசுங்
கனைகட லுறங்குங் காட்சிய தென்ன
வுறங்கிய காலையி லுலக
நினையுமு னறியும் பெரியவ
னருளா
னெடுவிசும் பிழிந்துநந்
நயினார்
மனையிடத் துறைந்தார் செவ்வியிற்
சிதையா
மணிச்சிறை வானவர்
கோமான்.
75
(இ-ள்) தனது தன்மையைக்
கருதி அவ்வாறு வந்து நெருங்கிய அந்தக் காபிர்களின் கூட்டமும் குரூர னென்னும் இபுலீசு லகுனத்துல்லாவும்
ஒலியா நிற்குஞ் சமுத்திர மானது தூங்குகின்ற தோற்றத்தைப் போன்று தூங்கிய சமயத்தில் எவ்
வுலகத்திலும் எப் பொருள்களும் கருதுவதற்கு முன்னரே யறியா நிற்கும் பெருமையை யுடையவனாகிய அல்லாகு
சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியத்தினால் அழகினாற் கெடாத இரத்தினச் சிறகுகளை யுடைய தேவ
ராதிப ரான ஜிபுரீல் அலைகிஸ்ஸலா
|