பக்கம் எண் :

சீறாப்புராணம்

941


இரண்டாம் பாகம்
 

மவர்கள் நெடிய வான லோகத்தை விட்டுமிறங்கி நமது நயினாராகிய நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது வீட்டின் கண் வந்து தங்கினார்கள்.

 

2541. மன்றன்முங் கியபொற் புயமுகம் மதுவை

          விளித்திறை சலாம்வகுத் தோதி

     யின்றிர வினினும் மனையினி லலியை

          யியல்பெறத் துயிலுதற் கியற்றிப்

     பொன்றிலாப் பசிய போர்வையிற் போர்த்துப்

          புறத்தினிற் காபிர்கண் முகத்தில்

     வென்றிகொண் டொருகை மண்ணெடுத் தெரிந்து

          விரைவினி லெழுமெனப் புகன்றார்.

76

      (இ-ள்) அவ்வாறு வந்து தங்கிய அவர்கள் பரிமள மானது நிறையப் பெற்ற அழகிய தோள்களை யுடைய நாயகம் நபிகட் அலைகிவசல்ல மவர்களைக் கூப்பிட்டு யாவற்றிற்கு மிறைவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் சலாமை வகைப் படுத்திக் கூறி இன்றைய விராத்தியிரியில் உங்களது வீட்டின் கண் ஒழுங்கோடும் அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களை நித்திரை செய்யும் வண்ணஞ் செய்து கெடாத ஓர் பசிய போர்வையினால் மூடி வெளியிற் காத்திருக்கின்ற காபிர்களினது வதனத்தில் ஒரு கை மண்ணை எடுத்துவீசி விட்டு வெற்றி கொண்டு சீக்கிரத்தில் எழும்புங்க ளென்று கூறினார்கள்.

 

2542. அமரருக் கரசர் மொழிப்படி திருந்த

          அலிதமை யணைமிசைப் படுத்தித்

     தமரொடு மிருந்து மூன்றுநாள் கடந்தென்

          றன்வயின் சாருமென் றுரைத்துக்

     கமைதரு மிருகண் மணியினுஞ் சிறந்த

          புதல்வியர் தமக்குங்கட் டுரைத்துத்

     தமைவளர்த் துவந்த பாத்திமா வெனுமத்

          தாயர்க்கு முரைத்தெழுந் தனரால்.

77

      (இ-ள்) தேவர்களுக் கெல்லாம் அதிப ரான ஜபுறயீ லலைகிஸ்ஸலா மவர்கள் கூறிய அவ் வார்த்தைகளின் பிரகாரம் அலியிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களைத் தங்களின் படுக்கை மீது செவ்வையாகப் படுக்கும்படி செய்து நீவிர் நமது பந்து ஜனங்க ளொடு முறைந்து மூன்று நாள் கழிந்த பிற்றை எனது பால் வந்து சேருமென்று கூறித் தங்களி னிரு கண்களினது தாரையிலுஞ் சிறப்படைந்த பொறுமையையுடைய மகளா ராகிய