|
இரண்டாம் பாகம்
காத்தூனே ஜன்னத் பீவிபாத்திமத்து
றலியல்லாகு அன்ஹா அவர்களுக்கும் உறுதியாய்த் தாங்கள் திரு மதீனமா நகரஞ் செல்லும் வரலாற்றை
கூறித் தங்களை நேசித்து வளர்த்த பாத்திமா வென்னும் அபிதானத்தை யுடைய அந்தத் தாயா ரவர்களுக்குங்
கூறி எழும்பினார்கள்.
2543.
திருமனைப் புறத்தி
னின்றொரு பிடிமண்
செங்கையி னினிதெடுத்
தேந்தி
யொருதரம் யாசீ னோதிநாற்
றிசையு
முறங்கிய காபிரை நோக்கி
யிருதிருக் கினும்வா யினும்புக
வெனவென்
றெண்ணியம் மண்ணினை
யெறிந்து
சொரிகதிர்ச் சுதைமா மனையிடங்
கடந்து
தோன்றினர் நீண்டமா
மறுகில்.
78
(இ-ள்) அவ்வா றெழும்பிய
அவர்கள் தெய்வீகந் தங்கிய தங்களின் வீட்டின் பக்கத்தில் நின்று இனிமை யோடும் செந் நிறத்தையுடைய
தங்களின் கைகளினால் ஒரு பிடி மண்ணை எடுத்துயர்த்தி யாசீ னென்னுஞ் சூறாவை யொரு தரம் புகன்று
தங்கள் வீட்டின் நான்கு திக்குகளிலுஞ் சயனிக்கும் அந்தக் காபிர்களைப் பார்த்து அவர்களின்
இரு கண்களிலும் வாயிலும் போய்ப் புகுதக் கடவ தென்று சொல்லி மனதின் கண்ணுங் கருதி அந்த மண்ணை
வீசி விட்டுக் கிரணங்களைச் சிந்தா நிற்கும் வெண் சுண்ணச் சாந்தையுடைய பெருமை தங்கிய அவ்வீட்டை
விட்டுந் தாண்டி நெடிய வீதியின் கண் வந்து சேர்ந்தார்கள்.
2544.
ஒருகதிர் நிகராப் பெரும்பதித்
தெருவி
னுலவிய தெனத்தனி நடந்து
கருவிழித் துவர்வா யாயிசா
வெனும்பெண்
கனியெனுங் கன்னியைப்
பயந்த
மருமலர்த் தொடைத்திண்
புயத்தபூ பக்கர்
மனைத்தலை வாயிலைக்
குறுகி
விரைவொடு மொருசொற் பிறந்திட
வுரைத்து
விளித்தனர் முகம்மது
நபியே.
79
(இ-ள்) அவ்விதஞ் சேர்ந்த
நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் ஒப்பற்ற
சூரிய னானவன் ஏனைய நகரங்க ளொன்றும் தனக் கீடாகாத பெருமையை யுடைய அந்தத் திரு மக்கமா
நகரத்தினது வீதியின் கண் உலாவியதை யொத்து ஒப்பற நடந்து சென்று கரிய கண்களையும் பவளம்
போன்ற வாயையுங் கொண்ட ஆயிஷா வென்று கூறும் அபிதானத்தையுடைய பெண்களில் கனி
|