பக்கம் எண் :

சீறாப்புராணம்

976


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சொன்ன தெய்வீகந் தங்கிய வாயினது முத்திரையான வார்த்தைகளின் ஒழுங்கிற் சிதகாத விசுவாசத்தையுடைய அவ்வபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் பேரழகைக் கொண்ட சிறப்பினையுடைய இரு சந்திரர் உறைந் தெழும்பினதை யொப்பத் தங்களின் தேகத்தி லுள்ள கிரணங்களானவை பிரகாசிக்கும் வண்ணம் அந்தத் தௌறு மலையினது தானத்தை விட்டும் ஆசையோடு மெழுந்தார்கள்.

 

2629. துட்ட வல்விலங் கினங்களொன் றொன்றினைத் துரத்தி

     விட்ட வாய்க்குர லதிர்தரும் வரையிடை விரைவின்

     பட்ட காரிருட் போதினிற் படரொளி குலவ

     வொட்ட கத்தின்மேற் கொண்டனர் தூதரி னுயர்ந்தோர்.

4

      (இ-ள்) அவ்வா றெழுந்து றசூல்மார்களி லெல்லாம் மேன்மைப் பட்டவர்களான நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தீமையைக் கொண்ட கொடிய மிருக சாதிகள் ஒவ்வொன்று ஒவ்வொன்றையோட்டி அதனால் விடுத்த வாயோசை யானது முழங்கா நிற்கும் அந்தத் தௌறு மலையின் கண் கதித்த கரிய இருட் காலத்தில் பரவிய பிரகாசமானது குலவும் வண்ணம் ஓ ரொட்டகத்தின் மீது வேகத்தில் ஏறியிருந்தார்கள்.

 

2630. அறிவின் மிக்கபூ பக்கரு மாமிறென் பவனும்

     பிமிதோ ரொட்டக மேற்கொடு வதிந்தனர் பிறங்கிச்

     செறியும் வல்லிருட் கானிடை யாவர்க்குந் தெரியா

     திறுகற் சின்னெறி கொண்டனன் கூலியி னிளவல்.

5  

      (இ-ள்) அவர்க ளவ்வித மிருக்க, அறிவினால் மிகுத்த அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் ஆமிறென்னும் அபிதானத்தை யுடையவனும் பிரகாசிக்கும் வண்ணம் மற்றையோ ரொட்டகத்தின் மீது ஏறியிருந்தார்கள். இளம் பருவத்தையுடைய அந்தக் கூலியாளன் அவர்களேறிய அவ்விரு ஒட்டகங்களையும் நெருங்கா நிற்கும் கொடிய அந்தகாரத்தை யுடைய அந்தக் காட்டினிடத்தும் யாருக்குந் தெரியாதபடி கற்கள் தங்கிய ஓர் சிறிய பாதையின் கண் கொண்டு சென்றான்.

 

2631. நஞ்சு முள்ளெயிற் றரவுறை வரையினள் ளிருளிற்

     பஞ்ச ரத்திருந் தெழுமரி யேறெனப் பரிவின்

     கஞ்ச மென்முக மலர்தரப் போயினர் கணியா

     வஞ்சர் நெஞ்சகம் போன்றமுட் சிறுநெறி வனத்தில்.

6