பக்கம் எண் :

118 வலம்புரி ஜான்


O

 

வளர்ப்புத் தந்தை

விரைந்தே முடித்தார்

வாணிபம் எல்லாம்.

 

O

 

விசாவே இன்றி

வெளி நாட்டிற்கு விரைகிற

மனதைப் போல

மக்கமா நகரம்

விரைந்தே வந்தார்.

 

O

 

கண்ணின் மணியாய்க் காத்தார் அதுவரை

அன்றிலிருந்து ...

அறுபது வயதில் முதன்முதலாக

முகிழ்த்த கருவை அடைகாத்திருக்கும்

அன்னப்பெண் போல் ...

பெரிதும் போற்றினார்

பிள்ளை முகம்மதை !

 

காலக்குரல்

 

O

 

மலைகள் ...

பூமி மகளின் புடைப்புகள் !

பள்ளத்தாக்குகளின்

எதிர்ப்பதம் !