O வெளிச்சம் எல்லாம் வில்லையாய் இறுகினால் எப்படி இருக்கும் ; அப்படி இருந்த முகம்மது முகத்தை உற்றுப்பார்த்தார் ... O சீதளப் புன்னகை செய்தி வாசிக்கிற ... சித்திர உதட்டில் தம்மை இழந்தார் ! O "இவர் - மேற்கில் உதித்த மேன்மைச் சூரியன் அரபு மண்ணிலிருந்து ... சிலை வணக்கத்தை அறவே ஒழிக்கும் ஈசா நபிகள் எடுத்துச் சொன்ன இறுதித் தூதர் இவரே என்பேன். O சூதர் சூழ்ச்சி நெருப்பு வளையம். மேன்மை மிக்க மெழுகுவர்த்தியை காப்பதும் கடனே!" பகர்ந்தார் பஹீரா ! |