O இயற்கைத் தொட்டிலில் அதிசம் ஆயிரம். முகம்மது இவற்றை முறையாய்ப் பார்த்தார் ... சிந்தனை அரங்கினில் செதுக்கியே நிறுத்தினார் ! O இயற்கை என்பது - இறைவனின் இருப்பை அலைவரிசைகளால் அஞ்சல் செய்கிற வானொலி நிலையம்! O மூல உண்மையை முகம்மது பெருமான் இளம் பருவத்திலேயே உணர்ந்திருந்தார்கள் ! O நாட்கள் ... ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கின ! O சிரியாப் பயணம் அண்ணலின் நினைவில் குழிக்கிழங்கு உமிழ்ந்த பச்சைப் பீலியாய் பையச் சிரித்தது ! |