பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்121


போர்க்களம் புகுந்த புண்ணியன்

 

O

 

அரேபியாவில்

குறைஷி வம்சத்தாரும்

கீஸ் வம்சத்தாரும்

வாளை உருவினர்.

உறையிலே கிடந்தால்

துருப்பிடித்திடும் என

வீர வாட்களை

விடுதலை செய்தனர் !

 

O

 

நெருப்புப் பெட்டிக்குள்

உறங்கிய குச்சிகள்

தலைகளில் மருந்து

விழித்தே இருப்பதை

உரசிக் காட்டின !

 

O

 

அரபுப் பெருமணல் ...

குருதிச் சேறாய்

குலைந்து புரண்டது !

 

O

 

அரபுச் சரித்திரம்

இந்தப் போரை ...

ஹர்புல் ஃபிஜ்ஜர் !

என்றே அழைக்கும்.