பக்கம் எண் :

156 வலம்புரி ஜான்


O

 

தரப்பட்ட அடிமையைக்

கதீஜா பிராட்டி

தாயகமான நாயகத்திடத்தே

தந்தே விட்டார் !

 

O

 

அடிமையின் கட்டுக்களை

அவிழ்த்தார் நாயகம் !

 

O

 

கடலை வண்டிகளைக்

கொண்டுவந்து

நிறுத்தி வைப்பதால்

கூண்டுக்கிளி என்ன

குதியா போடும் ?

சுதந்திரம் அன்றோ

சோறு அதற்கு?

பசுக்கள் காட்டில்

பசியால் இளைக்குமா?

தொழுவத்தில் அடைத்தால் தான்

தொல்லைகள் பிறக்கும்!

 

O

 

ஜைதுக்கு விடுதலையை

தந்ததோடு அல்லாமல்

இருக்க விருப்பமா?

இடம்பெயர விருப்பமா?

விருப்பம் போல் செயல்படுக

என்றார் முகம்மது ...