நதி ஒன்று நடந்தே போனது ! கண்ணைக்குத்தும் இமைகள் ! O உமரெனும் வேங்கைச்சிங்கம் உள்வந்த பின்னர் இஸ்லாம் கரிகாலன் வாளைப் போல களத்தினில் ஓங்கி நிற்கும். திரண்டதாம் தேனைக்காக்கும் திண்ணிய ஈக்கள் போல இறைவனின் வேதம் காக்க இயற்றினர் நாளும் நோன்பு. O வேலியில் பருத்தி உண்டே வேட்டியா விளைச்சலாகும்? முத்தென்றால் பாண்டிமுத்து. முதிர்ந்த புளி தருவதில்லை. அப்பளம் நிலவைப்போல அமைந்தது என்று சொல்லி இவை நோக்க முயலலாமா ? முறைத்தார்கள் மற்றவர்கள். O ஆயிரமாம் நரிகள் கூட ஆரவாரம் செய்தபோதும் பிறைநிலா சூட எண்ணும் |