பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்189


O

 

பலகை மதகுகளை

பாறைகளில்...

பருத்தித் துணிகளைப் போலப்

பரிமாறியது !

 

O

 

இஸ்லாமிய நதி

முள் மரங்களை

முதுகில் சுமக்க

ஆரம்பித்தது !

 

O

 

அவசரத்தில் பூட்டப்பட்ட

குழாயிலிருந்து -

சொட்டுகிற தண்ணீர்...

நேரம் எடுத்துக் கொண்டாலும்

நிச்சயமாய்

பானையை நிறைப்பதுபோல...

இஸ்லாம் வளர்ந்தது !

 

O

 

தட்டி எறிந்துவிடத் தக்க

கதவுகளாக இருந்தும்...

தாழ்ப்பாள்

உள்ளிருந்து திறக்கட்டும் என்று

இஸ்லாம்

பொறுமையாக இருந்தது !

 

*