இனிப்பு வைரத்தை... மூன்றாண்டு வரைக்கும் மூடிய கைக்குள் முறையாய் வைத்திருந்தார்! O விரல் இடுக்குகளின் வழியாகத்தான்... வெளிச்சம் விரைந்தது ! O அண்ணலாரின் கை நெல்லானது... வியர்வையில் ஆடி விரல்களில் ஓடி உள்ளங்கையினில் வயலாய் நிமிர்ந்தது ! O பின்னொரு நாள்... அச்சம் ஊட்டி எச்சரிக்குமாறு ஆண்டவன் - அறிவித்தான் ! O மூன்றாண்டுகள் சல்லடை வழியாய்ச் சரிந்த வெள்ளம்... பொங்கிப் பெருக்கெடுத்து பூவனமாய் ஆனது ! |