துன்பக் கடலில் தூயவர்! அபூதாலீப் அடங்கினார் ! O செறிந்த ஆலமரத்தின் கீழே செழிப்பதில்லை செடிகள் என்பது... பொதுவழக்கு! O பொது வழக்கைப் பொய்யாக்கி வெயிலையெல்லாம் விலைபேசி தான் வாங்கிக்கொண்டு... நிழலை மாத்திரமே முகம்மது என்கிற பிள்ளைச் செடிக்கு பிழிந்து தந்தவர் அபூதாலிப். O தேய்த்தால் வெளிப்படுகிற அல்லாவுதீன் விளக்கின் அற்புதமாக இல்லாமல் முகம்மது நல்லார்க்கு தேய்க்காமலே தேவைகளை நிறைவேற்றிய மூசாகாலத்து மன்னாவாக இருந்தவர் அபூதாலிப். |