* மனித வாமனமான குழந்தை தூங்குவதற்காகத் தாலாட்டுப்பாடாமல்... விழித்துக்கொள்ளுவதற்காகவே தவப்பாடல் இயற்றிய அன்னையாய், தந்தையாய் அண்ணலைப் பொதிந்து வளர்த்தவர் அபூதாலிப். O ஊருக்குள் கடல் நுழைந்து ஊர்வலம் போனபோதும், இந்தக் - கரையோரத்துக் கலங்கரை விளக்கிலேதான் கூடுகட்டிய மாடப்புறாபோல் குலையாதிருந்தார் நபிகள் பெருமான் ! O புறப்பட்ட இடத்திற்கே பொருட்கள் மீளுகின்றன என்னும் - பூகோள விதிக்கு... அபுதாலீப்பும் அடையாளம் ஆனார். * மன்னா என்பது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வாக்குத்தத்தின் பூமிக்குப்போனபோது இறைவன் வான்மழைபோல வழங்கிய அப்பங்கள். (விவிலியம்) |