பக்கம் எண் :

266 வலம்புரி ஜான்


அண்ணல் -

ஆற்றாது அழுதார்,

அரற்றினார்.

அவரது கண்கள்

வெற்றிலை போட்டுக்கொண்டன !

 

கதீஜா விளக்கு கண் வளர்ந்தது !

 

O

 

நாயகத்திருமேனிக்கு

எட்டுத்திக்கிலும்

தாக்குதல்

எழுந்து வந்த போது

தலைவைத்த

மடி இன்று

மரத்துப்போனது !

 

O

 

அவரது

விழிக்குளங்கள் உடைந்து

கண்ணீர் அருவி

கொட்டியபோது

பகைவர்கள் - அந்த

வெந்நீர் தெப்பத்தில்

கயல்மீன் பிடிப்பதிலேயே

கவனமாக இருந்தனர் !