பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்267


அஞ்சன விரல்களால்

அண்ணலின் -

துயர விழிகளைத்

தூங்க வைத்த

இரண்டே கரங்கள் இன்று

இற்றுப்போயின !

 

O

 

இயற்கையே

காற்றுக்கு

ஊரடங்கு உத்தரவு போட்டது.

 

O

 

அப்போது -

உள்ளிருந்த காற்றை

தனக்கின்றிக் கணவனுக்கு

தந்து நின்றாள் பெருமாட்டி.

 

O

 

அவளது -

மூக்கு முகத்துவாரங்களில்...

காற்று இப்போது

நாடு கடத்தப்பட்டது !