தூதரின் கிளிகள் தொத்திய அந்த - ஆல் வயிறு இன்று... அடங்கிப் போனது ! O மக்கா நகரில் ஒரு காலத்தில் மாளிகைக் கனவுகளின் மையப்புள்ளியாக இருந்த மேக சஞ்சாரம் இன்று கடலில் மழையாய் கரைந்து விட்டது ! O ஆதம் நபியின் அன்பு மகளே ! இப்ராஹிமிற்கு இறைவன் காட்டிய இதிகாச மணல் வெளியே! மூசாவின் கைக்கொம்பே ! தாவூதின் சங்கீதமே ! சுலைமானின் ஞானப்பாலே ! O ஈசாவின் அற்புதமே ! நபிநாதரின் நங்கூரமே ! |